செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

உரைநடை/பேச்சாளர்கள்

தொமுபாஸ்கரத்-தொண்டைமான் (1904 - 1965)

தொ. மு. பாஸ்கர தொண்டைமான் (சூலை 22, 1904 - மார்ச் 31, 1965) ஒரு தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்து கல்லூரியில் கல்வி கற்றார். கல்லூரி நாட்களில் ரா. பி. சேதுப்பிள்ளையின் தூண்டுதலால் ஆனந்த போதினி இதழில் கம்ப இராமாயணம் பற்றிய கட்டுரைகளை எழுதினார். இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரின் ”வட்டத் தொட்டிஎன்றழைக்கப்பட்ட இலக்கிய வட்டத்தில் ஒருவரானார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணியில் சேர்ந்தார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959 ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழகமெங்கும் பயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து கல்கி இதழில் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார்.

2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை நாட்டுடைமையாக்கியது.

படைப்புகள்

 • ஆறுமுகமான பொருள்
 • இந்தியக் கலைச்செல்வம்
 • இரசிகமணி டி.கே.சி
 • கம்பன் சுய சரிதம்
 • கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்
 • சீதா கல்யாணம்
 • பட்டி மண்டபம்
 • பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
 • வேங்கடத்துக்கு அப்பால் (வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு)
 • வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) முதல்பாகம்
 • வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) இரண்டாம் பாகம்
 • வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) மூன்றாம் பாகம்
 • வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) நான்காம் பாகம்

வேங்கடம் முதல் குமரி வரை (தமிழகத்துக் கோயில்கள்) ஐந்தாம் பாகம்.

16 February, 2024


மு.இராகவனார் (1878 - 1960)

 • தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர் என அனைத்து தளங்களிலும் இயங்கியவர்.
 • தமது 18-வயதிலேயே மதுரை தமிழ்ச்சங்கம் துவங்கிய பாண்டித்துரை தேவரின் அவைப் புலவராய் விளங்கியவர்.
 • தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக இவர் ஆற்றிய பணிக்காக  பிரித்தானிய இந்திய அரசின் ‘இராவ் பகதூர் ‘ பட்டம் பெற்றவர்.

19 February, 2024


இரசிகமணி டி.கே.சி. (1882 - 1954)

 • தமிழறிஞர், தமிழிசை ஆர்வலர், கடித இலக்கிய முன்னோடி ஆவார்.
 • சென்னைச் சட்ட மன்றத்தில் மேலவை உறுப்பினராகவும் (1927-1930), பின்னர் இந்து அறநிலையத்துறை ஆணையாளராகவும் (1930-1935) இருந்தார். 
 • வசந்தம் என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார்.
 • உருவாக்கிய படைப்புகளில் சில

இதய ஒலி

அற்புத ரஸம்

 • பதிப்பித்த படைப்புகளில் சில

கம்பர் தரும் ராமாயணம்

முத்தொள்ளாயிரம்

19 February, 2024


ப.ஜீவானந்தம் (1907 - 1963)

 • எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி, களச்செயல்பாட்டாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
 • பொதுவுடைமைக் கருத்துகளைத் தமது எண்ணமாகக் கொண்டு செயல்பட்டவர்.
 • இவர் நடத்திய இதழ்கள்
 • சமதர்மம், அறிவு, ஜனசக்தி, தாமரை
 • இவரின் படைப்புகள்
 • ஞானபாஸ்கரன் (நாடகம்)
 • மொழியைப்பற்றி ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
 • ஈரோடுப் பாதை சரியா?
 • சோஷலிஸ்ட் தத்துவங்கள் தேசத்தின் சொத்து (தொகுப்பு)
 • நான் நாத்திகன் ஏன்? – (பகத்சிங் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு)

 

 

19 February, 2024


உரை / பதிப்பாசிரியர்கள்

ச.வே.சுப்பிரமணியன் (1929 - 2017) 

 

 • தமிழ் மீது கொண்ட காதலால் 'தமிழூர்' என்ற ஊரினை நிர்மாணித்து,'தமிழகம்' என்று தனது இல்லத்திற்கு பெயர் சூட்டி,நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதி  வாழ்நாள் இறுதி வரை தமிழுக்காகவே உழைத்தவர்
 • இந்திய அளவிலும் ,உலக அளவிலும் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.
 • இந்திய சாகித்திய அகாடமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர்.

19 February, 2024


ச.தண்டபாணியார் (1903 - 1990)

 

 • படிக்கும் காலத்தே மாநிலத்தில் பல்கலைக்கழக  முதல் மாணவனாக விளங்கியவர்.
 • பேராசிரியராக , நூலாசிரியராக தம் வாழ்நாள் முழுதும் தமிழ்ப் பணியாற்றியவர்.
 •  கலைஞர் மு.கருணாநிதி, முன்னாள் நீதியரசரும் தமிழ் அறிஞருமான மு.மு.இஸ்மாயில் மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகிய தமிழ் தூண்களை உருவாக்கிய பெருமையுடையவர்.
 • தமிழ்ப் பணிகளுக்காக இந்திய அரசு  பத்ம பூஷன் விருதும், தமிழக அரசு  திருவள்ளுவர் விருதும்  வழங்கி அன்னாரை சிறப்பித்துள்ளது.

19 February, 2024


ஔவை துரைசாமி (1903 - 1981)

 

 • தமிழ் மொழி பற்று காரணமாக ’உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்’ பணியில் இருந்து விலகி, தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்தவர்.
 • புறநானுறு, ஐங்குறுநூறு, யசோதர காவியம்  உட்பட 34 உரை  நூல்களைப் படைத்தவர்.
 • கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள்  பல ஆராய்ந்து அவர் எழுதிய உரைகளுக்குச் சான்றாக எடுத்துக் காட்டி உண்மையை நிறுவியவர்.
 • ‘கலைமாமணி ‘, ’உரை வேந்தர் ‘ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.

19 February, 2024


சர்.ஆர்.கே.சண்முகனார் (1892 - 1953)

 

 • இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்.
 • "வசந்தம்' என்ற இலக்கிய மாத இதழ் பதிப்பாசிரியராகவும் இருந்தார்.
 • பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல
 • தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார்
 • இந்தியாவிலும், ஆசியக் கண்டத்திலும் மிகப் பெரிய தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

 

19 February, 2024


கா.சுப்பிரமணியனார்  (1888 - 1945)

 

 • தமிழறிஞர், உரையாசிரியராக செயல்பட்டவர்.  
 • சென்னைச் சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
 •  தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நூல்கள் எழுதியிருக்கிறார்.
 • உருவாக்கிய தமிழ் மற்றும் ஆங்கிலம் படைப்புகளில் சில 

இலக்கிய வரலாறு

திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம்

மாணிக்கவாசகப் பெருமான் வரலாறு 

தமிழர் சமயம்

 Introduction and History of Saiva Siddhanta

Metaphysics of Saiva Siddhanta System

 

19 February, 2024


Page 9 of 20, showing 9 record(s) out of 177 total