எஸ் ராமகிருஷ்ணன் (1966)

எஸ்.ராமகிருஷ்ணன்

(1966)

அறிமுகம்

எஸ். ராமகிருஷ்ணன், ஏப்ரல் 13, 1966-ல் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணறு என்ற ஊரில் சண்முகம் - மங்கையர்க்கரசி இணையருக்குப் பிறந்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா என வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுவருபவர்.

இவருடைய படைப்புகள் பல தென் மற்றும் வட இந்திய மொழிகளிலும்  ஆங்கிலம்,பிரெஞ்சு,ஜெர்மன் போன்ற அயல் நாட்டு மொழிகளிலும்  வெளியாகியுள்ளன.. இவருடைய புத்தகங்களை ஆராய்ந்து இதுவரை 21 பேர் எம்.பில். பட்டமும், 6 பேர் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். 4 பல்கலைக்கழகங்களில் இவருடைய நூல்கள் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்ப் பணி 

  • ‘அட்சரம்’ என்னும் சிற்றிதழை நடத்தினார். மும்மாத இதழாக எட்டு இதழ்கள் வெளிவந்தன.
  • உலக சினிமா குறித்து தமிழில் அதிகம் எழுதி, வருபவர். சினிமாவிலும் பங்களிப்பு செய்து வருகிறார். `அவன் இவன்’, `சண்டைக்கோழி’ போன்ற படங்களில் அவரின் எழுத்து, சினிமா ரசிகர்களையும் ஈர்த்தது. 
  • 1984-இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துகள் நூற்றுக்கும் மேற்பட்ட  எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன.
  • முதல் கதையான "பழைய தண்டவாளம்" கணையாழியில் வெளியாகியிருக்கிறது.
  • நவீன இலக்கியத்தை பொதுவாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தவர்.
  • ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளது .
  • முழுநேர எழுத்தாளர். ’தேசாந்திரி’ என்ற பெயரில் பதிப்பகம் நடத்தி வருகிறார்.

படைப்புகள் 

 

முக்கிய நூல்கள்:

  • உப பாண்டவம் (2000)
  • நெடுங்குருதி (2003)
  • துணையெழுத்து (2004)
  • கதாவிலாசம் (2005)
  • தாவரங்களின் உரையாடல் (2007)
  • யாமம் (2007)
  • எனது இந்தியா (2012)
  • மறைக்கப்பட்ட இந்தியா (2013)
  • சஞ்சாரம் (2014) (சாகித்ய அகாடமி விருது)
  • எனது இந்தியா (வரலாற்று நூல்)
  • மறைக்கப்பட்ட இந்தியா (வரலாற்று நூல்)

விருதுகள் மற்றும் சிறப்புகள் 

  • கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, மாக்சிம் கார்க்கி விருது, முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது, பெரியார் விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.