சிவக்கவிமணி-சிகேசுப்பிரமணியனார் (1878 – 1961)

 ‘சிவக்கவிமணி' சி.கே.சுப்பிரமணியனார்

 



அறிமுகம்

 

‘சிவக்கவிமணி' சி.கே.சுப்பிரமணியனார் (20 பெப்ரவரி 1878 – 24 சனவரி 1961), தமிழறிஞரும், வழக்கறிஞரும் ஆவார்.  பெரிய புராணத்திற்கு உரையெழுதிய உரையாசிரியர். சிவக்கவிமணி என்று அறிஞர்களால் போற்றப்பட்ட இவர் கோவை நகர்க்கனி, சைவக் குலமணி, வித்துவமணி, திருத்தொண்டர் புராணமணி, சேக்கிழார்செய் சேவையினை மக்களுணர்ந் துய்யவழி காட்டுமணி போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.வ.த.சுப்ரமணிய பிள்ளை (டிசம்பர் 11,1846- ஏப்ரல் 17,1909 ) வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை. தமிழறிஞர். திருப்புகழ் பாடல்களை தேடிக் கண்டடைந்து தொகுத்து வெளியிட்டார். மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றினார். வ.த.சுப்ரமணிய பிள்ளையின் மகன் புகழ்பெற்ற தமிழறிஞரான வ.சு.செங்கல்வராய பிள்ளை. சுப்ரமணிய பிள்ளையின் திருப்புகழ் பதிப்புப்பணி செங்கல்வராயபிள்ளையால் முன்னெடுக்கப்பட்டது.

சுப்பிரமணிய முதலியார் கோவையில் 1903 முதல் 1951 வரை 48 ஆண்டுகள் முழுநேர வழக்கறிஞராக இருந்தார்.1910இல் அறநிலையப் பாதுகாப்புத் துறை உறுப்பினர் பதவியேற்றார். 1922 முதல் 1925 வரை கோவை நகரசபை உறுப்பினர், துணைத் தலைவர் பதவிகளை வகித்தார்.

சுப்ரமணிய முதலியார் 1926 முதல் 1929 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி ஆணையராகப் பணியாற்றினார். சென்னை பல்கலையின் செனட் உறுப்பினர் என்னும் பொறுப்பும் வகித்தார்.

 

பட்டங்கள்

  • சிவக்கவிமணி - சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், 1940
  • திருமுறை ஞான பாநு - மதுரை ஆதீனம், 1954

 

படைத்துள்ள நூல்கள்

 

செய்யுள் நூல்கள்

  • திருப்புக்கொளியூர் அவிநாசிப் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்
  • கந்தபுராணப் போற்றிக் கலி வெண்பா
  • திருப்பேரூர் இரட்டை மணிமாலை
  • மருதங்கோவை

 

உரைநடை நூல்கள்

  • நீத்தார் பெருமை அல்லது ஸ்ரீமாணிக்கவாசகர்
  • வாகீசர் அல்லது மெய்யுணர்தல்
  • கருவூர்த் தேவர்
  • சேக்கிழார்
  • சேக்கிழாரும் சேயிழையார்களும்
  • செம்மணித் திரள்
  • அர்த்தநாரீசுவரர் அல்லது மாதிருக்கும் பாதியான்
  • திருத்தொண்ட புராணத்துள் முருகன்

 

பெரிய புராண உரை 

 

சிவக்கவிமணியின் பெரிய புராணப் பேருரை 1935ஆம் ஆண்டு முதல் இதழ்களாக வெளிவரத் தொடங்கியது. முதல் இதழ் 05.06.1935இல் சேக்கிழார் திருநாளன்று தில்லையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. ‘சிவக்கவிமணி அவர்களின் பெரியபுராணம் பேருரை, உயர்ந்த காகிதத்தில், 160 பக்கங்கள் கொண்டுள்ளது. நாற்பத்து நாலு சஞ்சிகைகளையும், ஆசிரியர் ஏழு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டுள்ளார். சிவக்கவிமணி தன் வரலாற்றை ‘ஒரு பித்தனின் சுயசரிதம்’ என்னும் தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார். இந்நூல் 270 பக்கங்களில் கையெழுத்துப் பிரதியாக உள்ளது. இதுவரையிலும் அச்சாகவில்லை. இந்நூல் அவரால் 1956ஆம் ஆண்டு எழுதப்பட்டது. சிவக்கவிமணி 1961ஆம் ஆண்டு சனவரி 24ஆம் நாள் தை மாதம் செவ்வாய்க்கிழமை பரணி நாளில் தன் 83ஆம் அகவையில் திருப்பேரூரில் காலமானார்.