செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

திராவிடப் பெரும் ஆளுமைகள்

அறிஞர் அண்ணா (சி.என்.அண்ணாதுரை) (1909 – 1969)

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.

19 February, 2024


'பன்மொழிப் புலவர்' கா.அப்பாத்துரையார் (1907 - 1989)

 

  • தமிழரின் தொன்மம் குறித்த பல ஆராய்ச்சி நூல்களை எழுதியவர். 
  • தனது ஆராய்ச்சி நூல்கள் மூலம் நேற்று, இன்று, நாளை என,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முன்னிறுத்தி  விவாதித்து ,விளக்கம் தந்தவர்.
  • தமிழும் தமிழரினமுமே, உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்ற கருத்தை  அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன் வைத்தவர்.

19 February, 2024


புலவர் குழந்தை (1906 - 1972)

 

  • திண்ணை வகுப்பு பயின்று இலக்கிய ஆர்வத்தின் காரணமாக இலக்கணங்களை தன் முயற்சியால் கற்று, தமிழாசிரியராக, உரையாசிரியராக, நூலாசிரியராக தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றியவர்.
  • பழந்தமிழ் மக்களின் வரலாற்றுக் கண்ணாடியாக விளங்கும் தொல்காப்பியத்தை ஆராய்ந்து “தொல்காப்பியர் காலத் தமிழர்”என்ற நூலை நமக்குத் தந்த பெருமையுடையவர்.
  • இந்தி திணிப்பை எதிர்த்து நின்ற மொழிப் போராளி.

19 February, 2024


கலைஞர் மு.கருணாநிதி (1924 - 2018)

எழுத்தாளர், பேச்சாளர், தமிழறிஞர்

பிறப்பு: 03.06.1924

மறைவு: 07.08.2018

இடம்: திருக்குவளை

பெற்றோர்: முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள்

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் என்றெல்லாம் அழைக்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர். தமிழ் இலக்கியம், நாடகம், அரசியல், திரைத்துறை எனப் பல துறைகளில் அழுத்தமான முத்திரை பதித்தவர். திராவிடச் சிந்தனையில் முகிழ்த்த கலைஞரின் எழுத்துகள் இனமான உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டுபவை. தந்தை பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின் மனங்கவர்ந்த தம்பிகளில் ஒருவர். நீராரும் கடலுடுத்த பாடலை தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவித்தவர். தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தவர்.

இதழ்கள்: மாணவர் நேசன், முரசொலி

படைப்பு:

புதையல்

ஒரே ரத்தம்

ரோமாபுரிப் பாண்டியன்

பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு

பாயும்புலி பண்டாரக வன்னியன்

தென்பாண்டிச் சிங்கம்

சாந்தா (அ) பழனியப்பன்

மணிமகுடம்

குறளோவியம்

திருக்குறள் கலைஞர் உரை

இனியவை இருபது

நெஞ்சுக்கு நீதி

19 February, 2024


தந்தை பெரியார் (ஈ.வெ.இராமசாமி) (1879 - 1973)

நவீனச் சிந்தனையாளர்

பிறப்பு: 17.09.1879

மறைவு: 24.12.1973

இடம்: ஈரோடு

பெற்றோர்: வெங்கடப்பர், சின்னத்தாயம்மை

இயற்பெயர்: ஈ.வெ.இராமசாமி

மனைவி: நாகம்மை, மணியம்மை

தமிழின் நவீனச் சிந்தனையாளர்; பத்திரிகை ஆசிரியர்; தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்டவர், ஒடுக்கப்பட்டோருக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்தவர்; களப்பணி ஆற்றியவர். திராவிட இயக்கச் சிந்தனையையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பரவலாக்கியவர்.

இதழ்கள்:

குடியரசு, திராவிடன், ரிவோல்ட் (ஆங்கிலம்), புரட்சி, பகுத்தறிவு, விடுதலை

நூல்கள்:

தந்தை பெரியார் முழு முதல் வாழ்க்கை வரலாறு

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்

போராட்டங்கள்:

கள்ளுக்கடை மறியல் போராட்டம் (1921)

வைக்கம் போராட்டம் (1924)

சேரன்மகாதேவி குருகுலப் போராட்டம் (1924)

இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1937)

கோயில் நுழைவுப் போராட்டம்

குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம் (1952)

அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டம்

இயக்கம்:

திராவிடர் கழகம்

சிறப்புப் பெயர்:

பெரியார்

வைக்கம் வீரர்

என் கருத்துகள் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா? அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா என்பதைக் குறித்து நான் கவலைப்படாமல், என் கருத்துகள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும், உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையில் இலட்சியம்.

-     தந்தை பெரியார். 

19 February, 2024


கு.ச.ஆனந்தன் (1934 – 1999)

 

  • சட்டம், அரசமைப்பு ஒப்பீட்டாய்வு, கட்டுரை, திருக்குறள் ஆய்வு, பதிப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர். 
  • மலர்க மாநில சுயாட்சி என்னும் நூலுக்குத் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றவர். 
  • புதுச்சேரி திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கிய முனைவர்-அரசியல் கலை ஆய்வாளர் பட்டம் பெற்றவர்; 
  • தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப்  பெற்றவர்.

19 February, 2024


Page 20 of 20, showing 6 record(s) out of 177 total