செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

மெய்யியல் அறிஞர்கள்

குன்றக்குடி அடிகளார் (1925 – 1995)

  • இதழியல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, தன்வரலாறு, மேடைத்தமிழ், இசை, சமூகநலம், மதஒற்றுமை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • திருக்குறள் பேரவை அமைப்பை உருவாக்கி ஆய்வரங்குகளை ஒருங்கிணைத்தவர். சட்டமேலவை உறுப்பினர், தீண்டாமை ஒழிப்பு இயக்கத் தலைவர், எழுத்துச் சீர்திருத்தக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.
  • தமிழ்நாடு அரசின் ‘திருவள்ளுவர் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

08 March, 2024


சமயம்/தொல்லியல் வரலாற்று அறிஞர்கள்

ந.சஞ்சீவி (1927-1988)

  • கல்வி, பதிப்பு, தமிழாய்வு, கட்டுரை, மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழக முதுகலைப் பாடத் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றியவர். தமிழ் மறுமலர்ச்சி சார்ந்த கருத்துக்களை எளிய பாடநூல் தன்மையுடன் மாணவர்களிடையே கொண்டு சென்றவர்.
  • ‘செந்தமிழ் இலக்கியச் செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

08 March, 2024


மயிலை சீனி.வேங்கடசாமி  (1900-1980)

  • இதழியல், பதிப்பு, கல்வி, தமிழாய்வு, வரலாறு, தொல்லியல், கல்வெட்டு, நாணயவியல், கட்டுரை, பகுத்தறிவு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • பண்டைய தமிழர் நாகரிகம், பல்லவர் கால வரலாறு பற்றிய இவரது நூல்கள் முன்னோடியானவை. சமண-பௌத்த இலக்கியப் பங்களிப்பைச் சான்றுகள் கொண்டு நிறுவியவர்.
  • தமிழ்ப் பேரவைச் செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

 

 

08 March, 2024


மா.இராசமாணிக்கனார் (1907-1967)

  • கல்வி, வரலாறு, பண்பாடு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • இலக்கியத் தரவுகள் அடிப்படையிலான வரலாற்று ஆய்வில் முதன்மையானவர்களில் ஒருவர். சோழர், பல்லவர்,
    சிந்துச் சமவெளி நாகரிக வரலாறுகளை எளிய தமிழில் எழுதியவர். இவரது பெரியபுராணம், தமிழர் திருமணம் குறித்த ஆய்வுகள் கவனம் பெற்றவை.
  • கல்லூரி மாணவர்களுக்கான பாடநூல்களை உருவாக்கியவர். ‘ஆராய்ச்சிக் கலைஞர்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

08 March, 2024


மு.அருணாசலம் (1909-1992)

  • பதிப்பு, கட்டுரை, தமிழாய்வு, சுவடிகள் சேகரிப்பு, கல்வெட்டு, நாட்டாரியல், தத்துவம், கணிதம், தோட்டக்கலை, சமூகப்பணி ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழ் இலக்கிய வரலாற்றைக் கால முறைப்படி ஆய்வு செய்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டவர். தமிழிசை முன்னோடிகள், இலக்கிய, இலக்கண வரலாற்றைக் களஞ்சியமாக ஆவணப்படுத்தியவர்.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக அகராதித் துறையின் தலைவராகப் பணியாற்றியவர்.

08 March, 2024


சாத்தான்குளம் அ. இராகவன் (1902-1981)

  • இதழியல், பதிப்பு, கல்வி, வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நுண்கலை, நாணயவியல், தொல்பொருள் சேகரிப்பு, சுயமரியாதை, பெண் கல்வி ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • திருவிளக்கு, தாமரை, அணிகலன்கள், யாழிசைக்கருவி, படைக்கலன்கள், கப்பல் கட்டும் கலை உள்ளிட்ட தமிழர் பண்பாடு சார்ந்த செய்திகளை முறையாக விளக்கியவர்.
  • கொற்கை உள்ளிட்ட தொல்நகரங்களைப் பற்றி ஆய்வு செய்தவர்.

08 March, 2024


மொழி/மொழியியல்/இலக்கண அறிஞர்கள்

க.வெள்ளைவாரணனார் (1917-1988)

  • பதிப்பு, இலக்கணம், தமிழிசை, கவிதை, தமிழாய்வு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தொல்காப்பிய வரலாற்றாய்வின் முன்னோடிகளில் ஒருவர். இவரது ‘பன்னிரு திருமுறைகளின்‌ வரலாறு’ நூல் இறையியல், இசை ஆய்வாளர்களுக்குக் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
  • ‘கலைமாமணி’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

08 March, 2024


தனிநாயகம் அடிகளார் (1913-1980)

  • இதழியல், கல்வி, கட்டுரை, தமிழாய்வு, மேடைத்தமிழ்,
  • பயணநூல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • இலங்கைத் தமிழறிஞர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை அமைக்க அடிகோலியவர். நான்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியவர். மலாய், பாரிசு உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • ஐரோப்பிய நூலகங்களில் இருந்த தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், அச்சு நூல்களை ஆய்வு செய்தவர். ‘கலாநிதி’ பட்டம் பெற்றவர்.

08 March, 2024


சி.இலக்குவனார் (1909-1973)

  • இதழியல், கல்வி, கவிதை, கட்டுரை, இலக்கணம், மொழிபெயர்ப்பு, தமிழாய்வு, மொழிப் போராட்டம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழியப் பண்பாட்டு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்க்காப்புக் கழகத்தைத் தொடங்கியவர். தமிழில் பிறமொழிக் கலப்பைத் தவிர்த்தவர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்.
  • ‘செந்தமிழ் மாமணி’, ‘இலக்கணச் செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

08 March, 2024


Page 6 of 20, showing 9 record(s) out of 177 total