இரா.இராகவனார் (1870-1946)

இரா.இராகவனார் (1870-1946)

இரா. இராகவையங்கார் சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமயநூலறிஞர், மொழிநூலறிஞர் எனப் பன்முகம் கொண்டவர். இக்காலத்தில் பேசப்படும் பெண்ணியச் சிந்தனைகளை அன்றே தமது, "நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்" எனும் நூலில் விளக்கியுள்ளார். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தொடங்கியபோது அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். பாஸ்கரசேதுபதியின் விருப்பத்திற்கிணங்கத மிழ்ச்சங்கத்தில் இருந்து கொண்டு நூற்பதிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் தலைவராகத் தொண்டாற்றினார். 1935ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறை தோற்று விக்கப்பட்டபோது அங்கு முதன்மை ஆராய்ச்சியாளராகப் பதவி ஏற்றார். இவர் எழுதிய "தமிழ் வரலாறு" 1941இல் வெளிவந்தது."சங்கு சக்கரச் சாமி வந்து சிங்குசிங்குகென ஆடுமாம்" என்று இன்றும் குழந்தைகளுக்காகப் பாடும் பாட்டு இவரால் எழுதப்பட்டதே ஆகும். இவரது தமிழ் புலமையைப் பாராட்டி உ. வே. சாமிநாதய்யர், மகாவித்துவான் என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார்.