’இலக்கியவீதி’ இனியவன் (1942 – 2023)

‘இலக்கியவீதி’ இனியவன் (1942 – 2023)

அறிமுகம்
இலக்கியவீதி இனியவன் (பிறப்பு: லட்சுமிபதி, 20 ஏப்ரல் 1942 - 2 சூலை, 2023) ஒரு தமிழக தமிழ் எழுத்தாளர் ஆவார். இனியவன், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கலை அடுத்த விநாயகநல்லூரில் வீராசாமி பங்கஜமாள் இணையருக்கு மகனாக பிறந்தார். பள்ளி இறுதிவரை படித்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சிறுவர் இதழ் நடத்திய போட்டிக்கு கதை எழுதி அனுப்பி முதற் பரிசு பெற்றார். சிறுகதை புதினங்களுக்கான போட்டிகளில் பரிசுகளையும் பெற்றார். தன் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ள பல தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்களை படிக்ககத் தொடங்கினார்.

தமிழ் மற்றும் சமுதாயப் பணி
இந்த அமைப்பின் குறிக்கோளுரையாக வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம் என்பது இருந்தது. இந்த இலக்கிய அமைப்பின் சார்பில் மாதம் தோறும் இலக்கியச் சந்திப்புகள் நடத்தபட்டன. அதில் எழுத்தாளர்களை அழைத்து, அறிமுகப்படுத்தி கவிதை, கட்டுரை, சிறுகதை, திறனாய்வு, விவாதங்கள் என பலவகையான நிகழ்ச்சிகளை நடத்துயுள்ளார். சிறுகதை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் ஆண்டின் இறுதியில் நூல் வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டன. தமிழ்நாடு தாண்டி தில்லி, அந்தமான் தீவுகள் என தொடங்கி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளிலும் தன் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

படைப்புகள்
இவர் 205 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 17 குறும்புதினங்களையும், 15 புதினங்களையும் எழுதியுள்ளார். வேடந்தாங்கல் என்ற பெயரில் பறவையியல் நூல் ஒன்றையும், இரண்டு பயண இலக்கிய நூல்களையும், உத்திரமேரூர் உலா என்ற பெயரில் செங்கல்பட்டு மாவட்டத்தின் அகநாட்டு வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

விருதுகள்
அமெரிக்க தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் மாட்சிமை விருது
வேலூர் கம்பன் கழக விருது
கண்ணப்பன் அறக்கட்டளையின் இலக்கிய நாயனார் விருது.