செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் தமிழ் அறிஞர்கள்

பெ.நா.அப்புஸ்வாமி (1891 - 1986)

 

  • தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் நூல்கள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார். 
  • இவரின் முக்கிய தமிழ் நூல்கள்
    • அணுவின் கதை
    •  சர்வதேச விஞ்ஞானிகள்
  • இவரின் முக்கிய தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்
    • விஞ்ஞானமும் விவேகமும்
    • கால எந்திரம் 
    • வசனமும் கவிதையும்
  • இவரின் முக்கிய ஆங்கில நூல்கள்
    • A Bunch of Essays on Tamil Literature
  • இவரின் முக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள்
    • Kurinji-p-pattu
    • Muttollayiram

19 February, 2024


மணவை முஸ்தபா (1935  - 2017)

  • அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றியதால்  அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார்.
  • தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்.
  • இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி கலைஞர் மு.கருணாநிதி அறிவியல் தமிழ்ச் சிற்பி எனும் விருதளித்துள்ளார். 
  • யுனெஸ்கோ பாராட்டிய முதல் தமிழன் என்ற பெருமை இவருக்கு உண்டு.
  • யுனெஸ்கோ கூரியர், தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர்

19 February, 2024


குழந்தை இலக்கிய ஆளுமைகள்

அழ.வள்ளியப்பா (1922 - 1989) 

  • குழந்தைகளுக்காக 2,000க்கும் மேலான பாடல்கள் எழுதிய இவர் குழந்தைக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.
  • குழந்தைகளுக்கான இதழ்களை நடத்திய அழ.வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கத்தை 1950இல் நிறுவினார்.
  • இதழ்கள்

 பாலர் மலர்

 டமாரம்

 சங்கு

 பூஞ்சோலை

 கோகுலம்

  • நூல்கள்

மலரும் உள்ளம்

பாட்டிலே காந்தி கதை

பாப்பாவுக்குப் பாட்டு 

சிறுவர் கதைப் பாடல்கள்

நீலா மாலா

19 February, 2024


நாட்டாரியல் அறிஞர்கள்

கி.இராஜநாராயணன் (1923 – 2021)

 பிறப்பு ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணன பெருமாள்

இடைசெவல், தமிழ்நாடு, இந்தியா இந்தியா

புதுச்சேரி

புனைப்பெயர் கி. ரா

நாடு இந்தியர்

எழுதிய காலம் 1958– 2021

இலக்கிய வகை சிறுகதை,புதினம்

கருப்பொருட்கள் நாட்டுப்புறவியல், கிராமிய வாழ்க்கை

குறிப்பிடத்தக்க

படைப்பு(கள்) கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

குறிப்பிடத்தக்க

விருது(கள்) 1991 – சாகித்திய அகாதமி விருது

துணைவர்(கள்) கணவதி அம்மாள்

பிள்ளைகள் திவாகரன், பிரபாகரன்

 

19 February, 2024


நா.வானமாமலை (1917 – 1980)

  • கலை, இலக்கியம், வாழ்வியல் நெறிகளை மார்க்சிய நோக்கிய ஆராய்ந்தவர்.
  • சக்தி, சரஸ்வதி, சாந்தி, தாமரை, கலைக்கதிர் போன்ற இதழ்களில் எழுதியுள்ளார். 
  • நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.
  • நடத்திய இதழ் ஆராய்ச்சி
  • உருவாக்கிய  நூல்களில் சில

           ஒப்பில்லாத சமுதாயம்

           தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்

           கட்டபொம்மு கூத்து

           தமிழர் வரலாறும் பண்பாடும்

           மார்க்சீய அழகியல்

 

19 February, 2024


திறனாய்வு அறிஞர்கள்

கா. சிவத்தம்பி (1932 - 2011)

  • கல்வி, வரலாற்றாய்வு, மானுடவியல், மொழியியல், திறனாய்வு, பொதுவுடைமை, நாடகவியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • நாடகத்தை மக்கள் இயக்கமாகவும் நாட்டார் கலைகளுடன் இணைத்துப் பார்த்தவர். இலங்கைத் தமிழறிஞர். தமிழ்ப் பண்பாட்டைப் பழந்தமிழ் இலக்கியங்களின் வழியே ஆய்வு செய்தவர். நவீன இலக்கியங்கள் சமூகத் தாக்கம் கொண்டவை எனப் பதிவு செய்தவர்.
  • தமிழ்நாடு அரசின் ‘திரு.வி.க. விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

23 February, 2024


க.த.திருநாவுக்கரசு (1931- 1989)

  • கல்வி, இதழியல், பதிப்பு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, மானுடவியல், தத்துவம், வரலாறு, கல்வெட்டு, மொழியியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.
  • சாகித்திய அகாதமி நிறுவனத்திடமிருந்து 'திருக்குறள் மணி' பட்டம் பெற்றவர்.

சாகித்திய அகாதமி விருது (1974)

திருக்குறள் நீதி இலக்கியம்’– இலக்கியத் திறனாய்வு

07 March, 2024


தி.க.சிவசங்கரன் (1925 - 2014)

இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்

இடம்: திருநெல்வேலி

தி.க.சி. என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன் பொதுவுடைவாதி. தாமிரபரணிக் கரையோர இலக்கியவாதிகளில் குறிப்பிடத் தகுந்தவர். தாமரை இதழால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளரானார். தி.க.சி.யின் அஞ்சல் அட்டை கடிதங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை.

இதழ்கள்: தாமரை

படைப்பு:

வசந்தகாலத்தில் (மொழிபெயர்ப்பு)

தி.க.சி.கட்டுரைகள்

விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்

விருது

சாகித்திய அகாதெமி

தமிழ்நாடு அரசின் இலக்கிய விருது

பாரதி இலக்கிய விருது



19 February, 2024


அ.ச.ஞானசம்பந்தன் (1916 - 2002) 

ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். சுருக்கமாக . . ஞா என்றும் அழைக்கப் பட்டார்.

19 February, 2024


Page 11 of 20, showing 9 record(s) out of 177 total