சுந்தர ராமசாமி (1933 - 1982)

 

சுந்தர ராமசாமி

(1931 – 2005)

 

அறிமுகம்

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது.



1988 ஆம் ஆண்டில் ‘காலச்சுவடு’ இதழை நிறுவினார்.         க.நா.சுப்ரமணியம், கிருஷ்ணன் நம்பி, ஜி. நாகராஜன், பிரமிள், சி.சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, தி.ஜானகிராமன் ப. ஜீவானந்தம் ஆகியோரைப் பற்றி ‘நினைவோடைகள்’ எழுதி வெளியிட்டார்.




விருதுகள்

  • குமரன் ஆசான் நினைவு விருது
  • இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.
  • கதா சூடாமணி விருது (2004)

 

நாவல்

  • ஒரு புளியமரத்தின் கதை (1966)
  • ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
  • குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)

 

சிறுகதைகள்

  • சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)

 

விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை

  • ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
  • ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
  • காற்றில் கரைந்த பேரோசை
  • விரிவும் ஆழமும் தேடி
  • தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
  • இறந்த காலம் பெற்ற உயிர், இதம் தந்த வரிகள் (2002)
  • இவை என் உரைகள் (2003), வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
  • வாழ்க சந்தேகங்கள் (2004)
  • புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
  • புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
  • மூன்று நாடகங்கள் (2006), வாழும் கணங்கள் (2005)

 

கவிதை

  • சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)

மொழிபெயர்ப்பு

  • செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
  • தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
  • தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)

 

நினைவோடைகள்

  • க.நா.சுப்ரமண்யம் (2003), சி.சு. செல்லப்பா (2003), கிருஷ்ணன் நம்பி (2003)

ஜீவா (2003), பிரமிள் (2005), ஜி.நாகராஜன் (2006), தி.ஜானகிராமன் (2006), கு.அழகிரிசாமி.