வ த சுப்பிரமணியனார் (1846-1909)

..சுப்பிரமணியனார்

(1846-1909)

அறிமுகம் 

..சுப்ரமணிய பிள்ளை எனும் வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை 1846 ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ந்தேதி தணிகாசலம் பிள்ளை -இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு   பிறந்தார்.  தனி ஆசிரியர் மூலம் வீட்டிலேயே இவருக்கு ஆரம்பக் கல்வி போதிக்கப்பட்டது. தமிழும் தெலுங்கும் பயின்றார் . 1857 ல் செங்கல்பட்டு மிஷன் பள்ளியில் உயர் கல்விக்காகச் சேர்ந்தார்.  

 

அங்கேயே சில ஆண்டுகாலம் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆசிரியராகப் பணியாற்றினார். பள்ளி ஆய்வுக்காக வந்த மில்லர் துரையின் அறிவுரைப்படி சென்னையில் மாகிண்டோஷ் ஸ்காலர் ஷிப்   தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து U.C.S., F.A.,தேர்விலும் வெற்றிப் பெற்றார்.

 

சிலகாலம் பச்சையப்பன் கல்லூரியிலும் , ஸ்காட்லாண்ட் மிஷன் பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் உடல்நலம் காரணமாக மஞ்சக்குப்பம் கோர்ட்டில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.

இவர் "முன்சீப்" (சிவில் ஹையர் கிரேடு) தேர்வில் தேர்ச்சி பெற்று 1882-ல் கடலூருக்கு மாவட்ட "முன்சீப்" ஆக நியமிக்கப்பட்டார் . எங்கு வேலைக்கு சென்றாலும் அருகிலுள்ள ஆலயங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் வழக்கமுடையவர்.  

 

தமிழ்பணி 

 

  • அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் பாடலின் சந்த நயமும் , சிறப்பும் உணர்ந்த சுப்ரமணியம் பிள்ளை உடனே அதைச் சேகரித்து நூலாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திருப்புகழ் சுவடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார்.
  • தான தர்மங்களில் நாட்டம் கொண்டிருந்த சுப்பிரமணிய பிள்ளை ,பல்வேறு மடங்களுக்கும், ஆலயங்களுக்கும் திருப்பணிகள் செய்தார்.



படைப்புகள்

 

  • நண்பர்கள் அளித்த சுவடிகளைக் கொண்டும், சுவடிகளை ஒப்பு நோக்கியும், அனந்தராம ஐயர், கடலூர் சிவசிதம்பர முதலியார் , சேலம் சரவணப் பிள்ளை போன்ற புலவர்கள் பலரது ஆதரவுடன், 24 ஆண்டு கால உழைப்பிற்கு பின் 1300 பாடல்கள் கொண்ட தொகுப்பாக , 1895 ஏப்ரலில் திருப்புகழ் முதற் பாகம் அச்சிட்டு வெளியிடப்பட்டது .
  • 1879-ல் வெளியான "பிரச்னோத்திர காண்ட வசனம்" என்ற நூலே  அச்சில் வந்த அவரது முதல் நூல். கோகர்ணபுராண சாரம் 'சுந்தர விளக்கம்’ (1904), 'சிவஸ்தல மஞ்சரி’ (1905) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார்.
  • வேத வேதாந்த விளக்கங்கள் குறித்தும், ஆங்கில நூல்கள், கட்டுரைகள் குறித்தும் இவர் 'ஜனவிநோதினிஉள்ளிட்ட சில இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இவர் எழுதிய 'திருத்துறைப்பூண்டி ஸ்தல புராணம்என்னும் நூல் திருத்துறைப் பூண்டி ஆலயத்தால் வெளியிடப்பட்டது.
  • ஓய்வு நேரத்தில் பல சுவடிகளை ஆராய்ந்து பல ஸ்தல புராணங்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் திருவாரூர் புராணம், வேதாரண்ய புராணம், மானாமதுரை ஸ்தல புராணம், திருநீடூர் தல புராணம் போன்றவை குறிப்பிடத்தக்கன
  • நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை, திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ் போன்றவை இவரால் பதிப்பிக்கப்பட்டது.   
  • திருத்தணி மீதான திருப்புகழையும் தனியாக அச்சிட்டு வெளியிட்டார்
  • இவரது மறைவிற்குப் பின் இவரது மகன்களான .சு. சண்முகம் பிள்ளை மற்றும் .சு. செங்கல்வராய பிள்ளை இருவரும் இணைந்து திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர்.

 

விருதுகள் 

  • இவருடைய வாழ்க்கை வரலாற்றை 121 பாடல்களாக 'திருப்புகழ் சுப்பிரமணிய நாயனார்என்ற தலைப்பில் வரகவி தென்னுர் சொக்கலிங்க பிள்ளை பாடியுள்ளார்.
  • வ.சு. செங்கல்வராய பிள்ளையும் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றை, 'வ. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார்.