செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

உரைநடை/பேச்சாளர்கள்

‘திருக்குறளார்’வீ.முனிசாமி (1913-1994)

 • இதழியல், பதிப்பு, கல்வி, கட்டுரை, மேடைத்தமிழ்,
 • திருக்குறள் பரப்புதல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கியவர். தமிழ்நாடு அரசு திருக்குறள் நெறி பரப்பு மைய இயக்குநராகப் பணியாற்றியவர். அயல் நாடுகளிலும் குறள் பரப்பும் பணியை மேற்கொண்டவர்.
 • ‘தமிழ்மறைக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

08 March, 2024


மு.வரதராசனார் (1912-1974)

 • கல்வி, தமிழ் இலக்கியம், பெண்ணியம், காந்தியம், தொழிற்சங்கம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.
 • திருக்குறளுக்கு எளிய உரை எழுதியவர். தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

 சாகித்திய அகாதமி விருது (1961)

அகல் விளக்கு’ – நாவல்

08 March, 2024


கி.வா.ஜகந்நாதன் (1906-1988)

 • கவிதை, கட்டுரை, திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, நாட்டாரியல் ஆய்வு, மேடைத்தமிழ் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • இவருடைய சிலேடைகள் தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்றவை. காந்தியத்தால் ஈர்க்கப்பட்டவர். தமிழ்த்தாத்தா
  உ. வே. சா. வின் மாணவர்.
 • வாகீச கலாநிதி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

சாகித்திய அகாதமி விருது (1967)

வீரர் உலகம்’– இலக்கியத் திறனாய்வு

08 March, 2024


ம.பொ.சிவஞானம் (1906-1995)

 • விடுதலைப் போராட்டம், கட்டுரை, மேடைத்தமிழ், தொழிற்சங்கம், இதழியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • மொழிவழியாக உருவான தமிழகத்தின் எல்லைப் போராட்டங்களில் தலைமை வகித்தவர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் தலைவராகப் பணியாற்றியவர்.
 • பத்மஸ்ரீ’, ‘சிலம்புச்செல்வர்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

சாகித்திய அகாதமி விருது (1966)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ – வாழ்க்கை வரலாறு

08 March, 2024


'சொல்லின் செல்வர்' இரா. பி. சே. (1896-1961)

 • கல்வி, சட்டம், கட்டுரை, உரைநடை, மேடைத்தமிழ் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • திருநெல்வேலி நகர்மன்றத் துணைத் தலைவராகப் பணியாற்றியவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பணியாற்றியவர்.
 • ‘இலக்கியப் பேரறிஞர்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

 சாகித்திய அகாதமி விருது (1955)

தமிழ் இன்பம்’ – கட்டுரைத் தொகுப்பு

08 March, 2024


மங்கலங்கிழார் (1897-1953)

 • கல்வி, கட்டுரை, உரைநடை, நாடகம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • தமிழக எல்லைப் போராட்டத்தில் சிறை சென்றவர். ஊர், ஊராகச் சென்று மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர். ‘அறநெறித் தமிழ்க் கழகம்’ அமைப்பின் தலைவராக இலவச மாணவர் சேர்க்கைக்கு வழிவகுத்தவர்.
 • நூற்றுக் கணக்கானோருக்கு அரசு மற்றும் ஆசிரியர் பணி கிடைக்கக் காரணமாக இருந்தவர். ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியவர். ‘தமிழ் மாமுனிவர் எனப் போற்றப்படுபவர்.

08 March, 2024


இரா.இராகவனார் (1870-1946)

 • இதழியல், பதிப்பு, கல்வி, மேடைத்தமிழ், இலக்கண-இலக்கிய ஆய்வுரைகள், செய்யுள், சிறார் இலக்கியம், உரைநடை, மொழிபெயர்ப்பு, மொழிவரலாறு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தில் நூற்பதிப்பு, ஆய்வுத்  துறைகளின் தலைவராகப் பொறுப்பேற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் பாண்டியன் நூலகத்திற்காகப் பல இடங்களுக்குச் சென்று பழஞ்சுவடிகளைத் திரட்டியவர்.
 • ‘மகாவித்துவான்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

08 March, 2024


வ.ராமசாமி (1889-1951)

 

 • இதழியல், விடுதலைப் போராட்டம், பெண் விடுதலை, சமூகச் சீர்திருத்தம், நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மையானவர்களில் ஒருவர். 'மணிக்கொடி’ இதழைத் தொடங்கியவர்களில் ஒருவர். அதன் ஆசிரியராக நையாண்டி, நடைச்சித்திரம் கொண்ட நடையை உருவாக்கியவர்.

 

08 March, 2024


திரு.வி.கலியாணசுந்தரனார் (1883-1953)

 • இதழியல், கல்வி, கவிதை, உரைநடை, மேடைத்தமிழ், வாழ்க்கை வரலாறு, சமுதாயம், விடுதலைப் போராட்டம், பெண்ணுரிமை, அரசியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • சென்னைத் தொழிற்சங்க உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்து, தொழிலாளர் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர். “இனி எங்கும் எவரும் தமிழிலேயே உரையாடவேண்டும்” என முழங்கியவர்.

08 March, 2024


Page 8 of 20, showing 9 record(s) out of 177 total