செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

உரை / பதிப்பாசிரியர்கள்

ந.மு.வேங்கடசாமி  (1884 - 1944)

பிறப்பு: 02.04.1884

மறைவு: 28.03.1944

பிறப்பிடம்: நடுக்காவேரி, தஞ்சாவூர்

தாய்: தையலம்மாள் தந்தை: முத்துச்சாமி நாட்டார்

 • ஆராய்ச்சியாளர்; சொற்பொழிவாளர்; தமிழறிஞர்.
 • ஆசிரியர் துணையின்றித் தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரை தமிழ்ச்சங்கத்தின் தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் கையால் தங்கத்தோடா பரிசு பெற்றார்.

19 February, 2024


தி.செல்வகேசவராயர் (1864-1921)

 

 • கே.செல்வகேசவராயர் தமிழ் தனித்தியங்கும் தன்மை உள்ள செம்மொழி என்பதனை நிறுவிய அறிஞர்களுள் ஒருவர் ஆவார்.
 • இவர் தமிழ்ப் பழமொழிகள் பலவற்றைத் தொகுத்து அவற்றுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்து இணைப் பழமொழிகள் என்னும் நூலை 1898-ஆம் ஆண்டில் வெளியிட்டார். 
 • பழமொழி நானூறு, ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி உள்ளிட்ட நூல்களை பதிப்பித்துள்ளார். மேலும், கம்பநாடர், வியாசமஞ்சரி, கண்ணகி கதை உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார்.

19 February, 2024


மு.சி.பூரணலிங்கனார் (1866 - 1947)

 

 • கிறித்தவக்கல்லூரியிலும் கோயமுத்தூர் புனித மைக்கேல் கல்லூரியிலும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 • நீதிக்கட்சியின் ‘ ஜஸ்டிஸ்’ ஆங்கில இதழின் துணையாசிரியராகப் பணியாற்றினார்.  
 • பரிதிமாற் கலைஞருடன் இணைந்து ஞானபோதினி இதழை நடத்தினார். 
 • ஆங்கிலத்தில் 32 நூல்களையும் தமிழில் 18 நூல்களையும் எழுதியுள்ளார்.
 •  உருவாக்கிய தமிழ் மற்றும் ஆங்கில படைப்புகளில் சில 

ஔவைக் குறள்

சூரபத்மன்

 Primer of Tamil Literature

Tamil India

 

19 February, 2024


கார்மேகனார் (1889 - 1957)

 • இவர் ஒரு பிரபலமான தமிழ் கவிஞர் மற்றும் கல்வியாளர். 
 • 1912 ஆம் ஆண்டு பண்டிதர் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கினார்.
 • 1914 இல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இந்திய மொழிகள் துறைத் தலைவராகச் சேர்ந்தார். தமிழ்த்துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றினார்.
 • இவர் 1916ல் திருக்குறள் ஆராய்ச்சிக்காக "பரிமேலழகர் கழகம்" தொடங்கினார்.
 • சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவின் தலைவராக இருந்தார்.
19 February, 2024


வ த சுப்பிரமணியனார் (1846-1909)

 • ..சுப்ரமணிய பிள்ளை திருப்புகழ் பாடல்களை தேடிக் கண்டடைந்து தொகுத்து வெளியிட்டார்.
 • திருத்தணிகை முருகன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்

திருவாரூர் புராணம், வேதாரண்ய புராணம், மானாமதுரை ஸ்தல புராணம், திருநீடூர் தல புராணம், நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை, திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ் போன்றவை இவரால் அச்சிடப்பட்ட குறிப்பிடத் தகுந்த படைப்புகள்.

19 February, 2024


சிவக்கவிமணி-சிகேசுப்பிரமணியனார் (1878 – 1961)

 • தமிழறிஞர், வழக்கறிஞர், இதழியல்,  பெரியபுராணத்திற்கு  உரையெழுதிய உரையாசிரியர் ஆகிய தளங்களில் இயங்கியவர்.   
 • சிவக்கவிமணி என்று அறிஞர்களால் போற்றப்பட்டவர்.
 • கோவை நகரசபை உறுப்பினர், துணைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி ஆணையர்,  செனட் உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தார்.
 • சிவக்கவிமணி தன் வரலாற்றை ‘ஒரு பித்தனின் சுயசரிதம்’ என்னும் தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார்.

19 February, 2024


அறிவியல் தமிழ் அறிஞர்கள்

வா.செ.குழந்தைசாமி (1929 - 2016)

கல்வியாளர், தமிழறிஞர், கவிஞர், பொறியியல் வல்லுநர்

இடம்: வாங்கலாம்பாளையம்

எளிய குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளிகளில் படித்த இவர் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். பெருந்தமிழறிஞர் தேவநேயப் பாவாணரிடம் தமிழ் கற்றவர். உலக அளவில் நீர்வளத் துறையில் தனிப்பெரும் சாதனை செய்தவர். குலோத்துங்கன் என்னும் பெயரில் கவிதை எழுதிய இவர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நிறுவனத் தலைவர்.

படைப்பு:

அறிவியல் தமிழ்

வாழும் வள்ளுவம்

உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்

மானுட யாத்திரை

குலோத்துங்கன் கவிதைகள்

விருது:

சாகித்திய அகாதெமி விருது, 1988.

பத்மஸ்ரீ, 1992

திருவள்ளுவர் விருது, 1999

பத்மபூஷண், 2002

19 February, 2024


எல்டிசாமிக்கண்ணு (1865 - 1925)

 

 • லூயிஸ் டாமினிக் சாமிக்கண்ணு பிள்ளை ஒரு இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர்
 • 1920-25 காலகட்டத்தில் சென்னை மாகாண அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார்.
 • அவைத்தலைவராக இருந்த போது சட்டமன்ற நூலகத்தை உருவாக்கினார்.
 • பிரித்தானிய இந்தியப் பேரரசின்  ‘திவான் பகதூர்’ பட்டம் பெற்ற இவர்,  Order of the Indian Empire-பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
 

19 February, 2024


பா.வே.மாணிக்கனார் (1871 – 1931)

 

 • பா.வே.மாணிக்கநாயக்கர்  அறிவியல் தமிழ் வளர்த்த தமிழறிஞர் ஆவார். 
 • ஒலி நூலாராய்ச்சியில் ஈடிணையற்று விளங்கியவர். தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் கண்ணுள்ள எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று காட்டியவர்.
 • தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியற் சொற்களை ஆக்கிப் பயன்படுத்தியவர்.
 • தமிழ் ஒலியிலக்கணம், தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம், தமிழ் மறை விளக்கம் ஆகிய நூல்களையும் எழுதி உள்ளார். 

 

19 February, 2024


Page 10 of 20, showing 9 record(s) out of 177 total