செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

மொழி/மொழியியல்/இலக்கண அறிஞர்கள்

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் (1901-1980)

  • கல்வி, தமிழாய்வு, கட்டுரை, திறனாய்வு, வரலாறு, மொழியியல், சட்டம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுத்தளத்தை அறிவியல் பூர்வமாக அணுகியவர். பல்கலைக் கழகங்களில் மொழியியல், ஒப்பிலக்கியத்தைப் பாடங்களாக்கியவர். திராவிட மொழிகளின் ஒலியமைப்பை விளக்கியவர். சிகாகோ பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பிரிவு தொடங்க வழிவகுத்தவர்.
  • ‘பத்மபூஷண்’, ‘கலைமாமணி’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

 

 

08 March, 2024


'நாவலர்' சோமசுந்தர பாரதியார் (1879-1959)

  • சட்டம், விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், தமிழாய்வு, கட்டுரை, மேடைத்தமிழ், வாழ்க்கை வரலாறு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றியவர்.
  • தீண்டாமை ஒழிப்பு, சடங்குகள் நீக்கிய திருமணம் போன்ற சமூகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்.

08 March, 2024


கா.நமசிவாயனார் (1876-1936)

  • கல்வி, இதழியல், பதிப்பு, செய்யுள், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, உரைநடை, குழந்தை இலக்கியம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழ்வழிக் கல்வி, தமிழ்ப் பாடநூல்கள் ஆக்கத்தின்
    முன்னோடியாகச் செயல்பட்டவர். 'வித்துவான்’ பட்டத்தினை முறையாகத் தமிழ் கற்றவர்களும் பெற வழிவகுத்தவர்.
  • தை முதல் நாளே ‘தமிழர் திருநாள்’ என்னும் கருத்தை முன்மொழிந்தவர். திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை அறிமுகப்படுத்தியவர்.

08 March, 2024


‘வண்ணச்சரபம்’தண்டபாணி சுவாமிகள் (1839-1898)

  • தமிழ் வழிபாடு, தமிழிசை, சித்திரக்கவி, சிற்றிலக்கியம்,தன்‌வரலாறு, தல புராணம், இலக்கணம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • ‘சரபம்’ வரிசையில் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழியோடு அறியப்பட்டவர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழிசைப் பாடல்களைத் தந்தவர்.
  • அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த சமூகச் சீர்திருத்த இறைமைக் கொள்கையாளர். பெண்கள் முன்னேற்றம்,
    சாதி மறுப்பு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

08 March, 2024


'மனோன்மணீயம்' சுந்தரனார் (1855-1897)

  • கல்வி, நாடகம், கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, கல்வெட்டு ஆய்வு, காலக்கணிப்பு, அறிவியல், தத்துவம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • இவர் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ என்ற பாடல் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக’ அறிவிக்கப்பட்டது.
  • தமிழ் மொழியைத் திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமை மொழியாக முன்னிறுத்தித் தமிழின் தனித்தியங்கும் தன்மையையும் பண்பாட்டு மேன்மையையும் வலியுறுத்தியவர்.

08 March, 2024


அரசன் சண்முகனார் (1868-1915)

  • கல்வி, கவிதை, கட்டுரை, இலக்கணம், இசைப்பாடல், உரை ஆய்வு, தருக்கம், சோதிடம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். தொல்காப்பிய ஆய்வுக்காகத் தம் வாழ்வின் பெரும் பகுதியை ஈந்தவர்.
  • அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நல்ல தமிழில் பெயர்களை வடித்தவர்.

08 March, 2024


ஜெகவீரபாண்டியனார் (1886-1967)

  • கல்வி, பதிப்பு, செய்யுள், உரைநடை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, வரலாறு, மேடைத்தமிழ் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • வள்ளுவரையும், கம்பரையும் தனது வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டவர். வீரபாண்டியக் கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் வரலாற்றைப் பதிவு செய்தவர்.
  • தமிழ் மாமுனி, ‘கவிராஜ பண்டிதர்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

 

08 March, 2024


உரைநடை/பேச்சாளர்கள்

வல்லிக்கண்ணன் (1920-2006)

  • இதழியல், திறனாய்வு, கட்டுரை, தன்வரலாறு,
    கடித இலக்கியம், திரைப்படம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • இலக்கியத் தகவல் களஞ்சியமாக விளங்கியவர்.
    சிற்றிதழ் உலகிற்குப் பெரும் தொண்டாற்றியவர்.
  • எழுத்து, இலக்கியம் ஆகியவற்றையே தம் முழுநேர வாழ்வாகக் கொண்டிருந்தவர்.

  சாகித்திய அகாதமி விருது (1978)

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ –
இலக்கியத் திறனாய்வு

08 March, 2024


வ.சுப.மாணிக்கனார் (1917-1989)

  • கல்வி, பதிப்பு, கவிதை, நாடகம், உரைநடை, தமிழாய்வு, மேடைத்தமிழ், சித்தாந்தம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டவர். 'தமிழ்வழிக் கல்வி இயக்கம்' என்னும் அமைப்பை நிறுவியவர். துணை வேந்தராகப் பணியாற்றியவர்.
  • தமிழ்நாடு அரசின் ‘திருவள்ளுவர் விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

08 March, 2024


Page 7 of 20, showing 9 record(s) out of 177 total