செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

திறனாய்வு அறிஞர்கள்

க.நா.சுப்ரமண்யம் (1912 - 1988)

பிறப்பு      : 31.01.1912 (வலங்கைமான், திருவாரூர்)

மறைவு     : 18.01.1988 (டெல்லி)

பெற்றோர்  : நாராயணசாமி

மனைவி   : ராஜி

 

  •         ’சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘இலக்கியவட்டம்’ ஆகிய இதழ்களை நடத்தினார்.
  •         நாவல்க, சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியதற்கு நிகராக மொழிபெயர்ப்பிலும் தீவிரமாகப் பங்களித்தவர்.
  •         அன்றாடம் எழுதும் வழக்கம் கொண்டிருந்த க.நா.சு. தமிழில் ஓர் எழுத்து இயக்கமாகச் செயல்பட்டவர்.
  •         தமிழ்நாடு அரசு சிறுகதை விருது, குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்: 

மயன் கவிதைகள்

அசுரகணம்

பொய்த்தேவு

விமர்சனக் கலை

இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (சாகித்ய அகாடமி விருது)

19 February, 2024


ஆ.முத்துசிவன் (1910 - 1954)

பேராசிரியர், தமிழாய்வாளர்

பிறப்பு         : 15.11.1910 (விக்கிரமசிங்கபுரம் – திருநெல்வேலி மாவட்டம்)

மறைவு        : 13.08.1954 (காரைக்குடி)

 

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பி.ஏ.(ஆனர்ஸ்) பட்டம் முடித்து புதுவையில் பள்ளியில் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். 1940 முதல் 1954 வரை காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார். ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர் பம்பாய், பூனா, கல்கத்தா பல்கலைக் கழகங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்

அசோகவனம்

அசலும் நகலும்

கவிதையும் வாழ்க்கையும்

மின்னல் கீற்று

 

ஆதாரம்: தமிழறிஞர்கள்(2018/2022) : அ.கா.பெருமாள்; காலச்சுவடு பதிப்பகம்

 

19 February, 2024


அ.சீனிவாசராகவன் (1905 - 1975)

அ. சீ. ரா என அழைக்கப்பட்ட அ. சீனிவாசராகவன் பன்முகத் திறமை கொண்ட தமிழ் எழுத்தாளர். இவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற ஆங்கிலப் பேராசிரியராகவும் விளங்கினார். சிறந்த தமிழ்க் கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டிருந்தார். சாகித்ய அகாதமி விருது முதன் முதலாக தமிழ்க்கவிதைக்காக வழங்கப்பட்டது, அ. சீ. ராவின் கவிதைக்குத்தான். நாணல்என்பது அவரது புனைபெயர்.இவர் தன் பெயரை அ.சீநிவாச ராகவன் என்றே எழுதிவந்தார்.

19 February, 2024




க.கைலாசபதி (1933 - 1982)

 

 

 

  • இதழியல், உயர்கல்வி, விமர்சனம், இலக்கியத் திறனாய்வு, கட்டுரை, அரசியல் ஆகிய தளங்களில் இயங்கியவர். 
  • யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு, இலங்கைப் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு, இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, ஆகிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டவர். 
  • ஈழத்தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத்தரம்பெற  அயராது உழைத்து ‘ஈழம் தந்த கொடை’ என்னும்  பெருமையைப் பெற்றவர்.

19 February, 2024


நசுப்பு (1916 – 2006)

 

 

  • தமிழ் இலக்கியத்தினுடைய 2500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் பிறமொழி தாக்குறவு பற்றி தரவுகளை ஆராய்ந்து நூல் வடிவில் வெளியிட்டவர். 
  • தன் ஆசிரியர் பயிற்சி அனுபவத்தை பிறருக்கு உதவும் வகையில் 1957-ல் 'தமிழ் பயிற்றும் முறை' என நூல் வடிவில்  வெளியிட்டவர்.
  • இனிமை, எளிமை,தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்பு.
  • தமிழக அரசு அன்னாரது நூல்களை நாட்டுடமையாக்கியுள்ளது. .

19 February, 2024


தமிழ்க்கவிஞர்கள்

புவியரசு (1930)

கவிஞர், மொழிபெயர்ப்பாளர்

பிறப்பு: 19.09.1931

கவிதையை மக்கள்மயப்படுத்திய வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி என இவரைச் சொல்லலாம். வானம்பாடி இவரது வீட்டு முகவரியைத் தாங்கியே வெளிவந்தது. மெய்யியல், கவிதை என சற்றேறக்குறைய நூறு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஃபியோதர் தஸ்யேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இருமுறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர்.

படைப்பு:

ஓஷோ

கரமசோவ் சகோதரர்கள்

மிர்தாதின் புத்தகம்

சங்க இலக்கியக் கதைகள்

பசித்த சிந்தனை

தீர்க்கதரிசி

ஒரு கோப்பைத் தேநீர்

எட்டுத் திசைக் காற்று

கையொப்பம்

 

19 February, 2024


கவிஞர் தமிழ்ஒளி (1924 - 1965)

 

  • பாரதியாரின் வழித்தோன்றலாக, பாரதிதாசனின் மாணவராக உறவு கொண்டு  அவரது நூலை படியெடுக்கும் வாயப்பின் மூலம் ஊக்கம் பெற்று கவிதை, கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனத்  தமிழின் தளங்களில் இயங்கியவர்.
  • மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்பட வேண்டும் என்ற கொள்கையுடையவர்.
  • இவரது ஆழ்ந்த புலமைக்கு 'சிலப்பதிகாரம் காவியமா,நாடாகமா?': 'திருக்குறளும் கடவுளும்': 'தமிழர் சமுதாயம்' இந்த மூன்று ஆய்வு நூல்களே சான்று. 

19 February, 2024


Page 12 of 20, showing 9 record(s) out of 177 total