செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

மெய்யியல் அறிஞர்கள்

மீ.ப.சோமு (1921 – 1999)

 • இதழியல், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை,
  சித்தர் இலக்கியம், பயண நூல், இசை, மேடைத்தமிழ் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் கீழ்த்திசையியலில் பட்டம் பெற்றவர்.
 • தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

சாகித்திய அகாதமி விருது (1962)

அக்கரைச்சீமை யில்’ – பயணக் கட்டுரை

25 February, 2024


பி.ஸ்ரீ (1886 - 1981)

 • இதழியல், கட்டுரை, மேடைத்தமிழ், பதிப்பு, வரலாற்றாய்வு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
 • செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றில் திறன் பெற்றவர். தமிழில் ஒப்பிலக்கிய வகைமைக்குப் பெரும்  பங்காற்றியவர்.

சாகித்திய அகாதமி விருது (1965)

ஸ்ரீ இராமானுஜர்’– வாழ்க்கை வரலாறு

25 February, 2024


பூவாளூர் தியாகராயர் (1826-1888)

 • பதிகம், கல்வி ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • படைப்பிரிவில் கிடைத்த வேலையை விடுத்துத் திருவரங்கம்‌ பள்ளியில்‌ ஆசிரியப்‌ பணியை உவப்புடன் ஏற்றுப் பணியாற்றியவர்.
 • பாயிரம் எழுதி வாங்க வரும் கவிஞர்களிடம் நேர்படப் பேசி,நல்ல செய்யுட்களை எழுதி வருமாறு ஊக்கம் அளித்தவர்.

12 March, 2024


அயோத்திதாசப் பண்டிதர் (1845 –  1914)

 • இதழியல், பதிப்பு, கல்வி, உரைநடை,
 • இட ஒதுக்கீடு, பெண்கள் முன்னேற்றம், சாதி எதிர்ப்பு, சமத்துவம், பண்பாடு, சித்த மருத்துவம், தத்துவம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி என அறியப்படுபவர். ‘தென்னிந்திய சாக்கிய பெளத்த சங்கம்’ என்னும் அமைப்பை நிறுவியவர்.
 • தமிழ்ச் சிந்தனை மரபில் மாற்று வரலாற்றுக்கான பாதையை முன்னெடுத்தவர். தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என வருணிக்கப்படுபவர்.

25 February, 2024


வ.உ.சிதம்பரனார் (1872 - 1936)

 • சட்டம், அரசியல், சுதேசிய விடுதலைப் போராட்டம், தொழிற்சங்கம், மொழிபெயர்ப்பு, இதழியல், பதிப்பு, இலக்கணம், கட்டுரை, மேடைத்தமிழ், தன்வரலாறு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • இன்னிலை, சிவஞானபோதம், திருக்குறளுக்கு உரையெழுதியவர். மெய்யறம், மெய்யறிவு நன்னெறி  நூல்களுடன், ‘மனம் போல் வாழ்வு’, ‘அகமே புறம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகளையும் அளித்தவர். மணக்குடவர் உரையுடன் திருக்குறளையும் இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியத்தையும் பதிப்பித்தவர்.
 • ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ எனப் போற்றப்படுபவர்.

25 February, 2024


மூதறிஞர் இராஜாஜி (1878 - 1972)

 • சட்டம், சிறுகதை, உரைநடை, விடுதலைப் போராட்டம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரல் உள்ளிட்ட பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்தவர்.
 • இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதானபாரத ரத்னாவிருது பெற்றவர்.

சாகித்திய அகாதமி விருது (1958)

சக்கரவர்த்தித் திருமகன்’ – உரைநடை

25 February, 2024


'பண்டிதமணி' மு.கதிரேசனார் (1881 - 1953)

 • கல்வி, பதிப்பு, உரைநடை, செய்யுள், கட்டுரை, தமிழாய்வு, மொழிபெயர்ப்பு, மேடைத்தமிழ் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • பள்ளியில் பயிலாமல், பல்கலைக் கழகப் பேராசிரியராகத் தமிழ்ப்பணி ஆற்றிய சிறப்புடையவர். இருபொருள்படப் பேசுவதில் வல்லவர். திருவாசகத்திற்கு உரை எழுதியதை வாழ்நாள் பணியாகக் கருதியவர்.
 • ‘முதுபெரும் புலவர்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

08 March, 2024


திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் (1873 - 1942)

 • மேடைத்தமிழ், தமிழ் வளர்ச்சி, பதிப்பு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் அமையக் காரணமாக இருந்தவர். வேறுபாடில்லாமல் தமிழ் கற்பிக்கக் கல்வி அமைப்புகளை நிறுவியவர்.
 • திருவையாறு வடமொழிக் கல்லூரியில் தமிழைக் கற்பிக்கவும் அக்கல்லூரி, ‘அரசர் கல்லூரி’ எனப் பெயர் பெறவும் வழிவகுத்தவர். மொழிப் போராட்ட ஆதரவாளர்.

08 March, 2024


எச் ஏ கிருட்டிணனார் (1827 - 1900)

 • இதழியல், பதிப்பு, கல்வி, உரைநடை, செய்யுள், தமிழிசைப் பாடல்கள், இலக்கணம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • ஹென்றி ஆல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ. ஆகும். தமிழில் கிறித்துவ இறைநெறிப் பாடல்கள் எழுதியவர்களில் முன்னோடி.
 • ‘இரட்சணிய யாத்திரிகம்’ என்னும் காப்பியத்தை எழுதியவர். ‘கிறித்துவக் கம்பர்’ எனப் போற்றப்படுபவர்.

08 March, 2024


Page 5 of 20, showing 9 record(s) out of 177 total