செந்தமிழ்சிற்பிகள்

மாயூரம்-வேதநாயகம் (1826 - 1889)

மாயூரம் வேதநாயகம்

(1826 - 1889)

அறிமுகம் 

தமிழ் உரைநடையை வளம் பெறச் செய்த முன்னோடிகளில் தலை சிறந்தவராகக் கருதப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் 1826-ம் ஆண்டு  பிறந்தார். 

இவர் தமிழ்நாட்டில் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர் மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்தார். அதனால் மாயூரம் வேதநாயம் பிள்ளை என்று  அழைக்கப்பட்டார். 

தமிழ்/சமுதாயப் பணி 

  • சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். 
  • மாயவரத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். இது தமிழகத்தில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பள்ளி.
  • இவரது கட்டுரைகள், பெண் கல்வி, தாய்மொழிப் பற்று, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், நீதி நெறிகள் என பல கருப்பொருளை கொண்டவை. 
  • 1876-1878 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். 

படைப்புகள்

  • 1879-இல் எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம்.
  • சுகுண சுந்தரி என்ற நாவலையும், பெண்கல்வி, பெண் மானம், பெண்மதி மாலை என்ற உரைநடை நூலையும் எழுதியுள்ளார்.
  • இவர் பிறப்பால் கிறிஸ்தவராயினும் வடலூர் இராமலிங்க அடிகளாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது சன்மார்க்க நெறிகளை பரப்பும் ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனை’களைப் பாடினார்.

மொழிபெயர்ப்பு 

  • கி.பி1805 முதல் கி.பி. 1861-ஆம் ஆண்டு அதாவது 56 ஆண்டுகள் வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாக 1862-இல் வெளிட்டார்.

விருதுகள் /சிறப்புகள் 

  • மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவரை தனது ‘சீர்காழிக் கோவை’ நூலில் ‘குளத்தூர் வேதநாயகன் கோவை’ என புகழ்ந்து பாடியுள்ளார். 

கோபால கிருட்டின பாரதி இவரது நட்பை பெருமை படுத்தும் விதமாக ‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆமோ?’ என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.