செந்தமிழ்சிற்பிகள்

அ மாதவையா (1872 - 1925)

அ.மாதவையா

(1872 - 1925)

அறிமுகம்

. மாதவையர், திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் 1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி பிறந்தவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர்.தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டு வருவதில் நம்பிக்கை உடையவர். 

தமிழ்ப் பணி

  • 1914 ஆம் ஆண்டில்இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது .
  • மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்.
  • 1924-ல் பஞ்சாமிருதம் என்ற பத்திரிகையை  நடத்தி வந்தார்.   அதில் தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவற்றை  1924 முதல் 1925 வரை வெளியிட்டு வந்தார் .
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார். 

படைப்பு

  • நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் இவர் எழுதிய ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடர் 1903 ஆம் ஆண்டுமுத்துமீனாக்ஷி’ என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது. 
  • 1898 ஆம் ஆண்டுபத்மாவதி சரித்திரம்’ என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. மூன்றாம் பகுதியினை எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையர் மரணமடைந்தார்.
  • பத்மாவதி சரித்திரம், முத்துமீனாட்சி, விஜயமார்த்தாண்டம் ஆகிய மூன்று நாவல்கள் தமிழிலும், Thillai Govindan,Satyananda,The story of Ramanyana உள்ளிட்ட  எட்டு ஆங்கில நாவல்களும் ,இரண்டு சிறுகதைகளும், திருமலை சேதுபதி,மணிமேகலை துறவு,ராஜமார்த்தாண்டம்,பாரிஸ்டர் பஞ்சநதம் ஆகிய நான்கு நாடக இலக்கியங்களும்,பொது தர்ம சத்கீத மஞ்சரி உள்ளிட்ட பல  கவிதைகளும் , கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார். 
  • ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.

மொழிபெயர்ப்பு 

  • குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து . மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924). 
  • உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் (ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஒத்தெல்லோ எனும் வெனிசு மோரியன்' நாடகத்தின் தமிழாக்கம்) (1903)

 

அ.மாதவையா

(1872 - 1925)

நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாசிரியர்

 

பிறப்பு                 : 1872 (பெருங்குளம் – தூத்துக்குடி மாவட்டம்)

மறைவு                : 1925 (சென்னை)

 சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று, சில ஆண்டுகள் உப்புத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார். பஞ்சாமிருதம் என்ற பத்திரிகையை  நடத்திவந்தார்.

 முக்கிய நூல்கள்

நாவல்கள்

தமிழ்

பத்மாவதி சரித்திரம்

முத்துமீனாட்சி

விஜய மார்த்தாண்டம்

 ஆங்கிலம்

கிளாரிந்தா

சத்தியானந்தன்

தில்லை கோவிந்தன்

 சிறுகதை

குசிகர் குட்டிக்கதைகள்உரைநடை

சித்தார்த்தன்தட்சிண சரித்திர வீரர்கள்

 

அ.மாதவையா

(1872 - 1925)

. மாதவையர் அல்லது . மாதவையா (A. Madhaviah, ஆகத்து 16, 1872 – அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டு வருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர்.

. மாதவையர், திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய. ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது

. 1924 சித்திரையில் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் .. 1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது.

படைப்புகள்

நாவல்

பத்மாவதி சரித்திரம் (1898)[5][6]

முத்துமீனாட்சி (1903)

விஜயமார்த்தாண்டம் (1903)

Thillai Govindan (1903)

Satyananda (1909)

The story of Ramanyana (1914)

Clarinda (1915)

Lieutenant Panju (1915)

Markandeya (1922)

Nanda (1923)

Manimekalai (1923)

பத்மாவதி சரித்திரம் மூன்றாம் பாகம் (1928, முற்றுப்பெறாதது)

சிறுகதை

Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன.

 

நாடகம்

திருமலை சேதுபதி (1910)

மணிமேகலை துறவு (1918)

ராஜமார்த்தாண்டம் (1919)

பாரிஸ்டர் பஞ்சநதம் (1924)

கவிதை

Poems (20 கவிதைகள்) (1903)

Dox vs Dox poems (1903)

பொது தர்ம சத்கீத மஞ்சரி (இரண்டு பாகங்கள், 1914)

The Ballad of the penniless bride (1915)

புது மாதிரிக் கல்யாணப் பாட்டு (1923)

இந்திய தேசிய கீதங்கள் (1925)

இந்தியக் கும்மி

கட்டுரை

Thillai Govindan's Miscellany (1907)

ஆசாரச் சீர்திருத்தம் (1916)

சித்தார்த்தன் (1918)

பால வினோதக் கதைகள் (1923)

பால ராமாயணம் (1924)

குறள் நானூறு (1924)

Dalavai Mudaliar (1924)

தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924)

தட்சிண சரித்திர வீரர் (1925)

இதைத் தவிர. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.