திருலோக சீதாராம்(1917 - 1973)

திருலோக சீதாராம்

 

அறிமுகம்

 

திருலோக சீதாராம் என்ற திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் (1 ஏப்ரல் 1917 – 23 ஆகத்து 1973) மேடைப்பேச்சாளர், சிவாஜி இதழின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், இலக்கியக் கட்டுரையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர்.[1] செருமானிய இலக்கியவாதி எர்மன் கெசியின் 'சித்தார்த்தா' புதினத்தைத் தமிழில் சித்தார்த்தன்என்று மொழிபெயர்த்து 1957 ஆம் ஆண்டு வெளியிட்டவர். மனுசுமிருதியையும் தமிழில் மொழிபெயர்த்தவர். 

இவர் பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறை என்ற ஊரில், திருவையாறு லோகநாத ஐயர்மீனாட்சி சுந்தரி என்ற தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு 1917 ஏப்ரல் முதல் தேதியன்று பிறந்தார். 

 

நடத்திய பத்திரிகைகளின் பட்டியல்

இந்திய வாலிபன்

ஆற்காடு தூதன் (விழுப்புரத்திலிருந்து)

கிராம ஊழியன் (துறையூரிலிருந்து)

சிவாஜி (திருச்சியிலிருந்து)

 

நூல்கள்

உதயம் - கவிதைத் தொகுதி - புதுப்புனல் பதிப்பகம்

கந்தருவ கானம் - கவிதைத் தொகுதி - கலைஞன் பதிப்பகம் - 1967

இலக்கிய படகு - கட்டுரைத் தொகுதி - கலைஞன் பதிப்பகம்

ஜி.டி.நாயுடு வாழ்க்கை பற்றிய நூல் - அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு

புதுயுக கவிஞர் - புவனேஸ்வரி பதிப்பகம் - பாரதியார் கவிதைகள் பற்றி