எச் ஏ கிருட்டிணனார் (1827 - 1900)

எச்.ஏ.கிருட்டிணர் (1827 - 1900)

அறிமுகம் 

கிருஷ்ண பிள்ளை தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டி எனும் ஊரில் வைணவ சமயத்தவரான  சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை ஆகியோருக்கு பிறந்தவர். கிருட்டிணப் பிள்ளை இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ்ப் புலவரான திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகப் பயின்றார். 

சாயர்புரம் திருமறைக் கல்லூரியில்  ஆசிரியர் பணி செய்து வரும் பொழுது, கிருத்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். கிருட்டிணப் பிள்ளையின் வைணவ சமயப் பற்று மெல்லத் தளர்வுற்று கிருத்துவ சமயத்தின் மீது பற்றுகொண்டவராக தமது முப்பதாம் வயதில் 1858-ல் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் இவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருத்துவ சமயத்தை ஏற்றுக்கொண்டார்.  

அது முதல் இவர் என்றி ஆல்பிரடு கிருட்டிணப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.  எச்.ஏ கிருட்டிணப்பிள்ளை என்பது பெருவழக்கு. 

தமிழ் பணி 

  • தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்று தகுதிவாய்ந்தவராக இருந்த கிருட்டிணப்பிள்ளையைக் கால்டுவெல் ஐயர் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார். 
  • 1886-ல் திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரியில் தலைமைத் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர். 
  • 1876-ல் பாளையங்கோட்டையில் திருச்சபை திருத்தொண்டர் கழகத்தினரின் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.
  • 1892-1900 -ல் கிருஸ்தவ இலக்கிய சங்கத்தின் ஆசிரியராக தொண்டாற்றினார்.

படைப்பு 

  • வேதப்பொருள் அம்மானை மற்றும் பரத கண்ட புராதனம்  என்னும் நூலை பதிப்பித்தார்.
  • ‘காவிய தரும சங்கிரகம்’ என்னும் நூலை தொகுத்தளித்தார்.
  • போற்றித் திருவகவல் (1884); இரட்சணிய யாத்திரிகம்(1894); இரட்சணிய மனோகரம்(1899); தேவார பதிக அமைப்பை பின்பற்றி பல தேவாரங்களை  இரட்சணிய யாத்திரிகத்தில் பாடியுள்ளார். போற்றித் திருவகவல் மற்றும் இரட்சணிய மனோகரம் செய்யுள்கள்  திருவாசகத்தின் போக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது கண்கூடு.
  • இவர் எழுதிய ‘இரட்சணிய குறள்’ , ‘இரட்சணிய பால போதனை இன்று வரை   கிடைக்கப் பெறவில்லை.

விருதுகள்: 

இவர் ‘கிருஸ்தவ கம்பர்’ என போற்றப்பட்டார்.