பாவேந்தர் பாரதிதாசன் (1891 - 1964)
- இவர் தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர்.
- ‘கனகசுப்புரத்தினம்’ இயற்பெயரைப் பாரதியார் மீது கொண்ட தீராத பற்றால் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர்.
- பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர்.
- தமிழ்நாடு அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது.
- 1970ல் ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன்
(1891 - 1964)
கவிஞர், எழுத்தாளர்
பிறப்பு: 29.04.1891
மறைவு: 21.04.1964
இடம்: புதுவை
இயற்பெயர்: சுப்புரத்தினம்
பெற்றோர்: கனகசபை, இலக்குமி.
மனைவி: பழனியம்மை
சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைப் பாரதியார் மீது கொண்ட தீராத பற்றால் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர். திராவிடச் சிந்தனையையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பெண்விடுதலையையும் தமது பாடல்கள் வழியே வெளிப்படுத்தியவர்.
இதழ்கள்: ஆத்மசக்தி, டூப்ளேக்ஸ், தாய்நாடு, புதுவை முரசு, குயில், முல்லை
படைப்பு:
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
புரட்சிக்கவி, பாரதிதாசன் கவிதைகள்
எதிர்பாராத முத்தம், தமிழச்சியின் கத்தி
இசையமுது, காதலா? கடமையா?
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
அழகின் சிரிப்பு
பாண்டியன் பரிசு