தி இலக்குமணார் (1864-1950)

தி.இலக்குமணார் (1864-1950)

திருநெல்வேலியிலிருந்து திருவிதாங்கூருக்குக் குடிபெயர்ந்த ஒரு பாரம்பரியமிக்க வேளாளக் குடும்பத்தில் 1864இல் பிறந்தவர் தி. லக்ஷ்மண பிள்ளை வடமொழிச் சொற்களை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று 1889இல் கருதிய இவர்தான் பின்னாளில் தம் பெயரைத் இலக்குமண பிள்ளை என்று தமிழ் படுத்திக் கொண்டார். 

 பி.ஏ. பட்டம் பெற்ற இலக்குமண பிள்ளை, கணக்கியலில் பயிற்சி பெறச் சென்னைக்குச் சென்றபொழுது பூண்டி அரங்கநாத முதலியார், டி.வி. சேஷகிரி சாஸ்திரி முதலானோரின் தொடர்பு ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசில் Major Treasury Officer ஆக உயர்பதவி பெற்று ஓய்வு பெற்றார். திருவிதாங்கூர் சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். 

தமிழ் மற்றும்  பணி

  • Iambic pentametre என்ற ஆங்கிலப் பா வடிவுக்கு ஈடான தமிழ் பா வடிவம் இல்லை என்றுகருதி, ‘கட்டளைக் கலித்துறையை எதுகை மோனைகளை நீக்கி அமைத்தார்’ என்று வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார். 
  • 1930களில் இ.மு. சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் அமைந்த தமிழ் வேர்ச் சொற்களின் அடிப்படையில் வடமொழி தவிர்த்த கலைச் சொல்லாக்க முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
  • இருப்பினும் இன்று தி. இலக்குமண பிள்ளை பெரிதும் அறியப்படுவது அவர் இசைத் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளுக்காகவே.
  • 'தமிழ்‌ பயில்‌ சங்கம்‌', 'கான சமாசம்‌' முதலான சங்கங்களைத்‌ தமிழுக்காகவும்‌, இசைக்காகவும்‌ தொடங்கி நடத்தி வந்தார்‌. தமிழர்‌ சங்கம்‌ மற்றும் தமிழ்ப்‌ பள்ளிகளைத்‌ தொடங்கினார்‌.
  • தமிழில் பல கீர்த்தனங்களை இயற்றிய இவருடைய பெருமை

1930-40களில் தோன்றிய தமிழிசைக் கிளர்ச்சியின்பொழுது நன்கு அறிமுகமானது.

  • தமிழ்வழிக்கல்விக்கான முயற்சிகளில் பங்கெடுத்த இலட்சுமண பிள்ளை அறிவியல், தத்துவம் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்குவதிலும் பங்களிப்பாற்றினார்.
  • இலட்சுமணபிள்ளை திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் தமிழ்க்கல்விக்கான போராட்டத்திலும், உயிர்க்கொலைத் தடுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். மண்டைக்காடு போன்ற ஆலயங்களில் உயிர்ப்பலி கொடுப்பதற்கு எதிராக செயல்பட்டு வெற்றி கண்டார்.

படைப்புகள்

  • ‘நினைவாட்சி’ என்ற செய்யுள் நூலை எழுதியுள்ளார். 
  • ‘ரவிவர்மா’ என்ற நாடக நூலை இயற்றியுள்ளார். 

 மொழிபெயர்ப்பு  

  • கிரேக்க மொழியிலமைந்த பைலாக்டெட்டிஸ் என்ற நாடகத்தை ஆங்கிலவழியாக ‘வீல நாடகம்’ என்று மொழியாக்கினார். 

விருதுகள்/சிறப்புகள் 

  • வையாபுரிப் பிள்ளை, ‘இசைத் தமிழ்ச் செல்வர்’ என்று  இவரைக் குறிப்பிடுகிறார்.