டி செல்வராஜ் (1938 - 2019)

டி.செல்வராஜ்

(1938 - 2019)

 

அறிமுகம்

தானியல் செல்வராசு (டி. செல்வராஜ்) ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இவர் நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

 ஆரம்ப வாழ்க்கை

1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் தந்தையார் தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணியாகப் பணியாற்றினார். திருவிதாங்கூர், கொச்சி சமஸ் தான அரசுபள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா.இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரம் பயின்றார்.சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலை சட்டம் பயின்றார்.

 இலக்கியப் பணிகள்

இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.அப்போது ரகுநாதன் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ இலக்கிய இதழில் அவருடைய படைப்புகள் வெளியாகின. ‘ஜனசக்தி’ வார மலர்களிலும் அவரது கதைகள் வெளியாகின. அவருடைய முதல் நாவலான “மலரும் சருகும்” நெல்லை வட்டாரத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் விவசாய வாழ்க்கையையும்,அன்று அம்மக்கள் நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட தேநீர் நாவல் அவரது அடுத்த முக்கியமான படைப்பாகும்.ஊமை ஜனங்கள் என்கிற பேரில் அக்கதை திரைப்படமாகவும் வெளிவந்தது.செம்மலரில் தொடராக வந்த “மூலதனம்” நாவல் உலகமயக் காலத்தில் முதலாளித்துவம் பற்றிய படைப்பு. திண்டுக்கல்லில் 40 களில் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் நடத்தப்பட்ட தோல் பதனிடும் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றை “தோல்” என்ற நாவலாகப் படைத்தளித்தார்.அதற்கு 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

 படைப்புகள்

200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். நோன்பு (ஆண்டாளைப் பற்றியது)

கிணறு

தொண்டன்

தாழம்பூ

ஊர்க்குருவியும் பருந்தும்

பணமும் குலமும்

சுயேச்சை சுந்தரலிங்கம்

அனாதைகள்

புதினங்கள்

6 நாவல்கள் எழுதியுள்ளார்