செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

சிறுகதையாசிரியர்கள்

லா.ச.ராமாமிர்தம் (1916 - 2007)

  பிறப்பு      : 30.10.1916 (பெங்களூரு)

மறைவு     : 30.10.2007 (சென்னை)

பெற்றோர்  : சப்தரிஷி, ஸ்ரீமதி

மனைவி   : ஹைமாவதி

மக்கள்      : 4 மகன், 1 மகள்

 

  •         சிறுகதை, நாவல், தன்வரலாறு, கட்டுரை ஆகிய வடிவங்களில் முதன்மையாகப் பங்களித்தவர்.
  •         தட்டச்சராகப் பணியைத் தொடங்கி, பிறகு வங்கிகளில் பணியாற்றினார்.
  •         இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பிற அயல் மொழிகளிலும் இவருடைய படைப்புகள் மொழியாக்கம் பெற்றுள்ளன.
  •         அக்னி அக்ஷரா விருது, கலைமாமணி, பதிப்பாளர் சங்க விருது, வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்: 

புத்ர (1966)

அபிதா (1970)

பாற்கடல்

சிந்தாநதி (சாகித்ய அகாடமி விருது)

19 February, 2024


விந்தன் (1916 - 1975)

 

  • இரவு பள்ளிகளில் படித்து தம் அறிவை வளர்த்துக் கொண்டு, அச்சு கோர்ப்பாளராக வாழ்வைத் தொடங்கி, அன்றாட வாழ்வியலை கதைகளாக படைக்கும் எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.
  • ஓவியர், பதிப்பாளர்,இதழாசிரியர் என தொடர்ந்து இயங்கியதோடு, திரைப்படத் துறையிலும் கதை -வசனம் ,பாடல் என தன் முத்திரையை பதித்தவர். 
  • தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடமை ஆக்கியுள்ளது.

19 February, 2024


புதுமைப்பித்தன் (1906 - 1948)

 

  • தினமணி உள்ளிட்ட சில பத்திரிக்கைகளில் உதவியாசிரியராக பணியாற்றினார்.
  • எழுத்துப்பணியில்   ஈடுபட்ட 15 ஆண்டுகளுக்கும் குறைவான   கால அளவிலேயே   நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,  பல கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமர்சனங்கள் என எழுதிக் குவித்தார்.
  • சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர். 
  • உருவாக்கிய படைப்புகளில் சில

கப்சிப் தர்பார்

பாசிஸ்ட் ஜடாமுனி

அதிகாரம் 

19 February, 2024


பி.எஸ்.இராமையா (1905 - 1983) 

பி. எஸ். இராமையா (மார்ச் 24, 1905 - மே 18, 1983) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். பல சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் எழுதியுள்ளார். மணிக்கொடி கால எழுத்தாளர் எனப் போற்றப்படுகிறார். இவர் பல திரைப்படங்களுக்கு கதை உரையாடலை எழுதியும், சில படங்களை இயக்கியுமுள்ளார்.

19 February, 2024


ந.பிச்சமூர்த்தி (1900 - 1976)

தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடி, சிறுகதாசிரியர்

 இயற்பெயர்      : வேங்கட மகாலிங்கம்

பிறப்பு           : 15.08.1900 (கும்பகோணம்)

மறைவு          : 04.12.1976 (சென்னை)

 

கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பும், கல்லூரிப்படிப்பும் பெற்றார். சென்னைச் சட்டக்கல்லூரியில் சட்டம்பயின்று வழக்குறைஞராகப் பணியாற்றினார்..1939 முதல் 1956 வரை இந்து அறநிலையத் துறையில் பணியாற்றினார். நவ இந்தியா பத்திரிகையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். 127 சிறுகதைகளும் 83 கவிதைகளும் 11 ஓரங்க நாடகங்களும் எழுதியிருக்கிறார்.

 முக்கியமான படைப்புகள்

சிறுகதைகள்

பதினெட்டாம் பெருக்கு

ஜம்பரும் வேஷ்டியும்

மோஹினி

மாங்காய்த் தலை

 கவிதைகள்

குயிலின் சுருதி

பிச்சமூர்த்திக் கவிதைகள்

ஆதாரம்: ந.பிச்சமூர்த்தி(2002) – அசோகமித்திரன் – சாகித்திய அகாதெமி

19 February, 2024


வ. வே. சு. (வ. வே. சுப்பிரமணியம்) (1881 - 1925)  

  • இதழியல், கல்வி, சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, வரலாறு, சட்டம், அரசியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்ந்து நவீன முறைப்படி எழுத ஆரம்பித்த முன்னோடிகளில் ஒருவர். கம்பராமாயணம், திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்.
  • நிகண்டு, அகராதிச் சொற்களின் பயன்பாடு அறிந்து பயன்படுத்த வாதிட்டவர். மொழிபெயர்ப்பில் புதிய சொல்லாட்சி வேண்டும் என வலியுறுத்தியவர்.

    

20 February, 2024


வண்ணதாசன் (1946)

பிறப்பு      : 1946

பெற்றோர்  : தி.க.சிவசங்கரன், தெய்வானை

இயற்பெயர் : சி.கல்யாணசுந்தரம்

  • சிறுகதை, கவிதை, கட்டுரை, கடிதம் ஆகிய தளங்களில் செயல்படுபவர்.
  •  கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார்.
  • பல்கலைக்கழகங்களில் இவருடைய கதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
  • இலக்கியச் சிந்தனை விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. 

முக்கிய நூல்கள்:

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  • ஒரு சிறு இசை (சாகித்ய அகாடமி விருது)
  • கல்யாண்ஜி கவிதைகள்
  • வண்ணதாசன் கடிதங்கள்

19 February, 2024


ஆதவன் (1942 - 1987)

எழுத்தாளர்

பிறப்பு: 21.03.1942

மறைவு: 19.07.1987

இடம்: கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம். 

இந்திய ரயில்வே துறையில் பணியாற்றிய ஆதவன் பின்னர் நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவில் பணியாற்றினார். ஆதவன் தன் கதைகளின் வழியே உரக்கச் சிந்திக்கிறார்; வாசகனுடன் தொடர்ந்த உரையாடலில் ஈடுபடுகிறார். தன் எழுத்தின் வழியே சமூகத்துடனான உறவை அடையாளத்தை மிக நளினமாக, கலை நேர்த்தியுடன் உறுதிப்படுத்திக்கொள்ள முயலுகிறார்.

படைப்பு:

இரவுக்கு முன்வருவது மாலை

கனவுக் குமிழிகள்

கால் வலி

காகித மலர்கள்

என் பெயர் ராமசேஷன்

முதலில் இரவு வரும் (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

ஆதவன் சிறுகதைகள்

19 February, 2024


நாவலாசிரியர்கள்

நா.பார்த்தசாரதி (1932 - 1987)

பிறப்பு      : 18.12.1932  (நதிக்குடி, விருதுநகர்)

மறைவு     : 13.12.1987

மனைவி   : சுந்தரவள்ளி

மக்கள்      : நாராயணன், பூரணி, பாரதி, மீரா, நித்யா.

 

  •         பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் பிறகு இதழாசிரியர் ஆனார். ‘கல்கி’, ‘தினமணிக் கதிர்’, ‘கலைக்கதிர்’ இதழ்களில் பொறுப்புவகித்தவர். பிற்காலத்தில், ’தீபம்’ மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.
  •         காமராஜர் தலைமையிலான ’ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சியில் உறுப்பினர்.
  •         இதழியல், சொற்பொழிவு, நாவல், குறுநாவல், சிறுகதை, பயண இலக்கியம், கவிதை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆய்வு ஆகிய வடிவங்களில் செயல்பட்டவர்.
  •         ராஜா சர் அண்ணாமலை இலக்கியப் பரிசு, தமிழ்நாடு அரசின் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 

துளசி மாடம்

குறிஞ்சி மலர்

சமுதாய வீதி (சாகித்ய அகாடமி விருது)

பாண்டிமாதேவி

ராணி மங்கம்மாள்

சாயங்கால மேகங்கள்

19 February, 2024


Page 15 of 20, showing 9 record(s) out of 177 total