ஜெயகாந்தன் (1934 - 2015)
பிறப்பு : 24.04.1934 (மஞ்சக்குப்பம், கடலூர்)
மறைவு : 08.04.2015 (சென்னை)
பெற்றோர் : தண்டபாணிப் பிள்ளை, மகாலெட்சுமி அம்மாள்
மனைவி : ஞானாம்பிகை, கௌசல்யா (எ) சீதாலட்சுமி
மக்கள் : ஜெயசிம்மன், தீபலட்சுமி
இயற்பெயர் : முருகேசன்
- கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளில் தீவிரமாகப் பங்காற்றியவர். சென்னை தியாகராய நகர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடவும் செய்திருக்கிறார்.
- சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படம், ஆன்மிகம், இதழியல், தன்வரலாறு, மொழியாக்கம் ஆகிய தளங்களில் செயல்பட்டவர்.
- இந்திய சோவியத் ரஷிய நட்புறவு விருது, தமிழக அரசு விருது, ஞானபீடம் விருது, பத்மபூஷன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
முக்கிய நூல்கள்:
ஜெயகாந்தன் சிறுகதைகள்
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்ய அகாடமி விருது)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
சினிமாவுக்குப் போன சித்தாளு
ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்