செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்கவிஞர்கள்

சிற்பி-பாலசுப்பிரமணியம்-1936

சிற்பி பாலசுப்பிரமணியம்

(1936)

பிறப்பு: 29.07.1936

இடம்: ஆத்துப்பொள்ளாச்சி

பெற்றோர்: கி.பொன்னுசாமி, கண்டி அம்மாள்

விரிவுரையாளராகத் தம் பணியைத் தொடங்கிய பாலசுப்பிரமணியம், பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். கவிதை மீது இருந்த பிரியத்தால் சிற்பி என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார். இரு முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் பங்களிப்பாளர்களில் ஒருவர்.

இதழ்கள்:

வானம்பாடி, அன்னம் விடு தூது, வள்ளுவம், கவிக்கோ, கணையாழி.

படைப்பு:

நிலவுப் பூ

சிரித்த முத்துக்கள்

மௌன மயக்கங்கள்

ஒரு கிராமத்து நதி

நீலக்குருவி

கவிதை வானம்

அக்கினி சாட்சி

16 February, 2024


அப்துல் ரகுமான் (1937 - 2017)

கவிஞர், எழுத்தாளர்

பிறப்பு: 09.11.1937

மறைவு: 02.06.2017

கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிடப்படுகிறார் அப்துல்ரகுமான். தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளின் பாதிப்பால் தமிழில் வசன கவிதைகளை எழுதினார். கவியரங்களில் புதுக்கவிதைகளையும் வசன கவிதைகளையும் புகுத்தியவர்.

படைப்பு:

அவளுக்கு நிலா என்று பெயர்

ஆலாபனை

இது சிறகுகளின் நேரம்

கடவுளின் முகவரி

கவிக்கோ கவிதைகள்

பால்வீதி

முத்தமிழின் முகவரி

விருது:

 கலைமாமணி, சாகித்திய அகாதெமி, கலைஞர் விருது.

19 February, 2024




திரைப்பட ஆளுமைகள்

கண்ணதாசன் (1927-1981)

  • இதழியல், கவிதை, நாவல், திரைப்படம், தன்வரலாறு, தத்துவம், மொழிபெயர்ப்பு, மேடைத்தமிழ் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • ‘கவியரசு’ எனத் தமிழர்களால் கொண்டாடப்படுபவர்.
    தமிழ்நாடு அரசின் ‘அரசவைக் கவிஞராக’ நியமிக்கப்பட்டவர்.
  • திரையிசைப் பாடலுக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

 சாகித்திய அகாதமி விருது (1980)

சேரமான் காதலி’ – நாவல்

12 March, 2024


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959)

 அறிமுகம்

ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

 

 

19 February, 2024


வைரமுத்து (1953)

பிறப்பு      : 13.07.1953 (வடுகப்பட்டி, தேனி)

பெற்றோர்  : ராமசாமி, அங்கம்மாள்

திரைப்படப் பாடல்கள், கவிதை, ஹைக்கூ, நாவல், கட்டுரை, தன்வரலாறு ஆகிய வடிவங்களில் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர்.

1980–இல் திரைப்பாடல்கள் எழுதத் தொடங்கியவர் இதுவரை 6000–க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

தேசிய விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

முக்கிய நூல்கள்:

  • தமிழுக்கு நிறமுண்டு
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • வில்லோடு வா நிலவே
  • கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்ய அகாடமி விருது)
  • கருவாச்சி காவியம்

19 February, 2024


சிறுகதையாசிரியர்கள்

கு.அழகிரிசாமி (1923 - 1970)

பெற்றோர்  : குருசாமி, தாயம்மாள்

மனைவி   : சீதாலக்‌ஷ்மி

மக்கள்      : ராமசந்திரன், சாரங்கராஜன், ராதா, பாரதி

 

  •         சென்னையிலும் மலேயாவிலும் பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்நேசன் முதலான பத்திரிகைகளில்             பணியாற்றியவர்.
  •         மாக்ஸிம் கார்க்கியின் நான்கு புத்தகங்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
  •         ‘கவிச்சக்கரவர்த்தி’ நாடகத்துக்காக தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்தது. ‘அன்பளிப்பு’ சிறுகதைத் தொகுப்புக்காக கு.அழகிரிசாமியின் மறைவுக்குப் பிறகு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

 

முக்கிய நூல்கள்:

 கு.அழகிரிசாமி கதைகள்

கவிச்சக்கரவர்த்தி (1963)

அன்பளிப்பு (1967) (சாகித்ய அகாடமி விருது)

புது வீடு புது உலகம் (1988)

19 February, 2024


தி.ஜானகிராமன் (1921 - 1982)

பிறப்பு      : 18.06.1921 (தேவங்குடி, தஞ்சாவூர்)

மறைவு     : 18.12.1982

பெற்றோர்  : தியாகராஜ சாஸ்திரி

மனைவி   : ராஜம் (எ) ராஜலட்சுமி

மக்கள்      : ராதா ராமன், சாகேத ராமன், உமா சங்கரி

 

  •         முதலில் ஆசிரியப் பணி. பிறகு, வானொலிகளில் கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியாற்றினார்.
  •         கர்நாடக இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். முறையாக இசையைக் கற்றறிந்தவர். இசை தொடர்பான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்; அவருடைய படைப்புகளிலும் இசைக்கு முக்கிய இடம் உண்டு.
  •         சிறுகதை, குறுநாவல், நாவல், பயணக் கட்டுரை, நாடகம், மொழியாக்கம் போன்ற இலக்கிய வடிவங்களில் செயல்பட்டவர்.

 

முக்கிய நூல்கள்:

 கொட்டுமேளம் (1954)

சிவப்பு ரிக்‌ஷா (1956)

மோகமுள் (1964)

சிவஞானம் (1964)

அம்மா வந்தாள் (1966)

சக்தி வைத்தியம் (1978) (சாகித்ய அகாடமி விருது)

19 February, 2024


Page 14 of 20, showing 9 record(s) out of 177 total