செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

நாவலாசிரியர்கள்

சோதர்மன் (1953)

பிறப்பு      : 08.08.1953 (உருளைகுடி, கோவில்பட்டி)

சிறுகதை, நாவல், ஆய்வு ஆகிய வடிவங்களில் செயல்பட்டுவருபவர்.

இருபதாண்டு காலம் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டவர். இப்போது முழுநேர எழுத்தாளர்.

இலக்கியச் சிந்தனை விருது, சுஜாதா விருது, தமிழக அரசு விருது, கனடா தோட்ட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

முக்கிய நூல்கள்:

  •  தூர்வை
  • கூகை
  • சூல் (சாகித்ய அகாடமி விருது)
  • நீர்ப்பழி
  • வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி

19 February, 2024


ஜி.திலகவதி (1951)

பிறப்பு: 1951

தமிழ்நாட்டின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியான திலகவதி பெண்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை தரும் எழுத்துக்குச் சொந்தக்காரர். பள்ளிப் பருவத்திலேயே இவரைத் தொற்றிய இலக்கிய ஆர்வம் தமிழ்நாடு அறிந்த எழுத்தாளராக்கியது. நூற்றுக்கணக்கான சிறுகதைகள், 20 குறுநாவல்கள், ஏழு நாவல்கள் எனத் தமிழ் இலக்கியத்துக்கு இவர் பங்களித்துள்ளார்.

இதழ்: அம்ருதா

படைப்பு:

  • கல்மரம் (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)
  • வார்த்தை தவறிவிட்டாய்
  • முப்பது கோடி முகங்கள்
  • பத்தினிப் பெண்
  • அலைபுரளும் கரையோரம்
  • தேயுமோ சூரியன்
  • சல்வடார் டாலி
  • காலந்தோறும் அறம்
  • சொப்பன பூமியில்
  • உனக்காகவா நான்
  • நேசத்துணை

19 February, 2024


மேலாண்மை பொன்னுசாமி (1951 - 2017)

எழுத்தாளர்

பிறப்பு: 30.10.1951

மறைவு: 30.10.2017

இடம்: மேலாண் மறைநாடு 

எளிய குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பைப் பாடியில் நிறுத்தியவர். நூலகங்களில் தமிழ் இலக்கியங்களையும் ரஷ்ய இலக்கியங்களையும் வாசித்து வாசித்தே எழுத்தாளரானவர். தீவிர இடதுசாரிச் சிந்தனையாளரான இவர் செம்மலர், கல்கி, ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் எழுதியுள்ளார். மனிதர்மீது கரிசனத்துடன் எழுதும் இவர் கரிசல் இலக்கியப் படைப்பாளி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதன்மைப் பொறுப்பாளர்களில் ஒருவர்.

படைப்பு:

  • மின்சாரப் பூ (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)
  • முற்றுகை
  • சிபிகள்
  • பாசத்தீ
  • தழும்பு

19 February, 2024


பூமணி (1947)

பிறப்பு      : 12.05.1947 (ஆண்டிப்பட்டி, கோவில்பட்டி)

இயற்பெயர் : பூ.மாணிக்கவாசகம்

சிறுகதை, நாவல் என்ற இரண்டு இலக்கிய வடிவங்களில் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர்.

தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக ’கருவேலம்பூக்கள்’ திரைப்படத்தை இயக்கினார். இவருடைய ‘வெக்கை’ நாவல் ‘அசுரன்’ திரைப்படமானது.

இலக்கியச் சிந்தனை விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது, அக்னி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

முக்கிய நூல்கள்:

  • பூமணி சிறுகதைகள்
  • வெக்கை
  • பிறகு
  • அஞ்ஞாடி (சாகித்ய அகாடமி விருது) 

19 February, 2024


நாஞ்சில்-நாடன் (1947)

பிறப்பு      : 31.12.1947 (கன்னியாகுமரி)

இயற்பெயர் : க. சுப்பிரமணியம்

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் செயல்பட்டுவருபவர்.

இவருடைய படைப்புகளில் எண்ணற்ற ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம் உள்ளிட்ட வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் இவருடைய ஆக்கங்கள் பாடத்திட்டங்களாக உள்ளன.

இலக்கியச் சிந்தனை விருது, பம்பாய் தமிழ் எழுத்தாளர் சங்க விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

முக்கிய நூல்கள்:

  • தலைகீழ் விகிதங்கள்
  • எட்டுத்திக்கும் மதயானை
  • நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
  • சூடிய பூ சூடற்க (சாகித்ய அகாடமி விருது)

19 February, 2024


பிரபஞ்சன் (1945 - 2018)

பிறப்பு      : 27.04.1945

மறைவு     : 21.12.2018

இயற்பெயர் : சாரங்கபாணி வைத்தியலிங்கம்

 சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம், கட்டுரை ஆகிய வடிவங்களில் செயல்பட்டவர்.

  ‘குங்குமம்’, ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’ போன்ற வெகுஜன இதழ்களில் பணியாற்றினார்.

  தமிழக அரசு விருது, புதுவை அரசு விருது, இலக்கியச் சிந்தனை விருது, முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 முக்கிய நூல்கள்:

 

  •  மானுடம் வெல்லும்
  • வானம் வசப்படும் (சாகித்ய அகாடமி விருது)
  • பிரபஞ்சன் கதைகள்
  • அப்பாவின் வேஷ்டி

 

 

19 February, 2024


அம்பை (1944)

பிறப்பு      : 17.11.1944

புது டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

எழுத்து, இசை, நடனம் என வெவ்வேறு தளங்களில் பெண்களின் பங்களிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டவர்.

அம்பையின் கதைகள் ஐந்து தொகுப்புகளாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது, டொரான்டோ பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது, கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 ஸ்பாரோ எனும் பெண்கள் ஆவணக் காப்பத்தை மும்பையில் 1988இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்படுகிறார்.

 முக்கிய நூல்கள்:

  •  சிறகுகள் முறியும் (1976)
  • அம்மா ஒரு கொலை செய்தாள்
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
  • காட்டில் ஒரு மான் (2000)
  • சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (2019) (சாகித்ய அகாடமி விருது)




19 February, 2024


தோப்பில் முகமது மீரான் (1944 - 2019)

பிறப்பு      : 26.09.1944 (தேங்காய்ப்பட்டிணம், கன்னியாகுமரி)

மறைவு     : 10.05.2019

பெற்றோர்  : முஹம்மது அப்துல் காதர், ஃபாத்திமா

மனைவி   : ஜலீலா மீரான்

மக்கள்      : ஷமீம் அஹம்மது, மிர்ஷாத் அஹம்மது

 

  •         சிறுகதை, நாவல், மொழியாக்கம் ஆகிய வடிவங்களில் செயல்பட்டவர்.
  •         இஸ்லாம் குடும்பப் பின்னணியையும் இஸ்லாம் சமூகப் பின்னணியும் பண்பாட்டுப் பின்புலத்தோடு நுட்பமாகத் தன்னுடைய படைப்புகளில் கொண்டுவந்தவர்.
  •         தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 

ஒரு கடலோரக் கிராமத்தின் கதை

சாய்வு நாற்காலி (சாகித்ய அகாடமி விருது)

கூனன் தோப்பு

தோப்பில் முஹம்மது மீரான் கதைகள்

அஞ்சுவண்ணம் தெரு

19 February, 2024


சு.சமுத்திரம் (1941 - 2003)

எழுத்தாளர்

பிறப்பு: 15.12.1941

மறைவு: 01.04.2003

இடம்: திப்பணம்பட்டி, தென்காசி மாவட்டம். 

ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி பல அரசுப் பதவிகளை வகித்தவர். அன்றாடம் நாம் பார்க்கின்ற அடித்தட்டு மனிதர்களை கதாபாத்திரங்களாக வைத்துக் கதைகளைப் படைத்தவர்.  சாமானிய மனிதரின் எண்ணங்கள், ஆசைகள், வாழ்க்கைச் சூழல்கள், அவற்றால் ஏற்படும் நெருக்கடிகள் ஆகியவற்றை சமுத்திரத்தின் சிறுகதைகளில் காணலாம். 

படைப்பு:

ஊருக்குள் ஒரு புரட்சி

என் பார்வையில் கலைஞர்

சத்திய ஆவேசம்

சாமியாடிகள்

மூட்டம்

வட்டத்தை மீறி

வளர்ப்பு மகள்

வெளிச்சத்தை நோக்கி

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதெமி விருது பெற்றது)

 

19 February, 2024


Page 18 of 20, showing 9 record(s) out of 177 total