செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

நாவலாசிரியர்கள்

வை.மு.கோதைநாயகியம்மாள் (1901 - 1960)

 

  • எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரராக இயங்கியவர்.
  • இந்திர மோகனா, அருணோதயம், வத்சகுமார், தயாநிதி ஆகிய நாடகங்கள் பலரது பாராட்டையும் பெற்றவை. 
  • 115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.
  • பாடல்கள் புனைவதிலும் வல்லவர். இவரின் நாவல்கள் பல திரைப்படமாகவும் வெளிவந்தன.
  • இசையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். குரல்வளம், உச்சரிப்பு, பாடும்திறன் ஆகியவற்றாலும் புகழ் பெற்றிருந்தார். 

19 February, 2024


’கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி (1899-1954)

சரித்திர நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர்

 இயற்பெயர்      : ரா. கிருஷ்ணமூர்த்தி

 பிறப்பு           :  09.09.1899 (புத்தமங்கலம் – தஞ்சாவூர் மாவட்டம்)

இறப்பு           :  05.12.1954 (சென்னை)

 

திரு.வி.கவின் நவசக்தி இதழில் பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார்; பின்னர் ஆனந்த விகடன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராக ஆனார். 1941இல் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைதண்டனைப் பெற்றார். தமிழிசை இயக்கத்தின் ஆதரவாளராகத் திகழ்ந்தார்.

 

முக்கிய நூல்கள்

நாவல்கள்

தியாகபூமி

சிவகாமியின் சபதம்

பொன்னியின் செல்வன்

பார்த்திபன் கனவு

அலையோசை

 

உரைநடை

ஏட்டிக்குப் போட்டி

மூன்றுமாத காவல்

சங்கீத யோகம்

மாந்தருக்குள் ஒரு தெய்வம்

 

ஆதாரம்: சுடர் கல்கி மலர் (1967) – தில்லித் தமிழ்ச் சங்கம்.

 

19 February, 2024


அ மாதவையா (1872 - 1925)

 

  • இதழியல், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, பெண் முன்னேற்றம், இசை, வாழ்க்கை வரலாறு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
  • தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்.அச்சேறும் பழந்தமிழ் நூல்களின் இலக்கிய நயத்தை பொது வாசகர்களுக்கு புரியும்படியாக எழுதும் உரைமரபை தொடங்கியவர்களில் ஒருவர்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக செய்யப்பட்டவர்.
  • தமிழைக் கட்டாயப் பாடமாக இளங்கலைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

19 February, 2024


மாயூரம்-வேதநாயகம் (1826 - 1889)

 

தமிழின் முதல் நாவலாசிரியர், தமிழிசை ஆர்வலர், சீர்த்திருத்தவாதி

சீகாழியிலும் தரங்கம்பாடியிலும் மாயவரத்திலும் நீதிபதியாகவும் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின் மாயவரம் நகர சபைத் தலைவராக இருந்தார். 

முக்கிய நூல்கள்

பிரதாப முதலியார் சரித்திரம்(தமிழின் முதல் நாவல்)

சுகுண சுந்தரி (நாவல்)

பெண்கல்வி, பெண் மானம், பெண்மதி மாலை(உரைநடை)

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்(பாடல்கள்)

19 February, 2024


சு வெங்கடேசன் (1970)

  • கவிதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்.என செயல்பட்டு வருபவர்.
  • தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி உள்ளிட்ட பல அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு இவரது ஆய்வுகளும், கட்டுரைகளும், களப்பணிகளும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.
  • இவருடைய நாடாளுமன்ற உரைகள் மொழி, இலக்கியம், வரலாறு, சமூகம் என முக்கியத்துவம் வாய்ந்தவை.
  • சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

19 February, 2024


எஸ் ராமகிருஷ்ணன் (1966)

  • 25 வருட காலமாக நாவல், சிறுகதைகள், நாடகம், கட்டுரைகள், குழந்தை இலக்கியம் ,மொழிபெயர்ப்பு, திரைத்துறை என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்.
  • முழு நேர எழுத்தாளராக இந்தியா முழுவதும் பயணித்து, வாழ்வின் யதார்த்தத்தை , அனுபவத்தை நாவலாக,கட்டுரைகளாக  வெளிக் கொணர்பவர்.
  • தேசாந்திரி, யாமம்,, சஞ்சாரம், எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகியவை இவரது குறிப்பிடத்தக்கப் படைப்புகளாகும்

19 February, 2024


இமையம் (1964)

  

  • கல்வி, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆகிய தளங்களில் இயங்குபவர்.
  • சமூக இழிவுகளை சுட்டிக்காட்டி அடையாளப்படுத்தும் படைப்பாளி. இவரது படைப்புகள் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது ‘பெத்தவன்’ நாவல் ‘முந்திரிக்காடு’ திரைப்படமாக ஆக்கம் பெற்றுள்ளது.
  • தமிழ்நாடு அரசு திரு.வி.க. விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

சாகித்திய அகாதமி விருது (2020)

செல்லாத பணம்’– நாவல்

03 September, 2024


ஜோடி-குரூஸ் (1963)

ஜோ.டி. குரூஸ்

  • கவிதை, நாவல், ஆவணப்படம், கட்டுரை, திரைப்பட வசனம் ஆகிய தளங்களில் செயல்படுபவர்.
  • சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது ‘ஆழி சூழ் உலகு’: , ‘கொற்கை’ புதினங்கள் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை.
  • தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான விருது, சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

19 February, 2024


மு. ராஜேந்திரன் (1959)

பிறப்பு   : 06.05.1959 (வடகரை, மதுரை)

  • சிறுகதை, நாவல், கட்டுரை, பயணக் கட்டுரை, செப்பேடுகள், ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, மொழியாக்கம் ஆகிய தளங்களில் செயல்படுபவர்
  •  கம்பன் பாரதி தமிழ்ச் சங்க விருது, டான்ஸ்ரீ சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

முக்கிய நூல்கள்:

  • காலா பாணி (சாகித்ய அகாடமி விருது)
  • 1801
  • வெயில் தேசத்தில் வெள்ளையர்கள்
  • செயலே சிறந்த சொல்
  • செப்பேடுகள் நூல்கள்

19 February, 2024


Page 17 of 20, showing 9 record(s) out of 177 total