செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

நாவலாசிரியர்கள்

அசோகமித்திரன் (1931 - 2017) 

பெற்றோர்  : ஜகதீசர், பாலாம்பாள்

மனைவி      : ராஜேஸ்வரி

மக்கள்         : ரவிசங்கர், முத்துக்குமார், ராமகிருஷ்ணன்

இயற்பெயர் :  ஜ.தியாகராஜன்

         சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், அனுபவக் கட்டுரைகள் போன்ற இலக்கிய வடிவங்களில்               செயல்பட்டவர்.

  •         1973 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகம் நடத்திய எழுத்தாளர்களுக்கான                 சிறப்புப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டவர்.
  •         இவருடைய ஆக்கங்கள் ஆங்கிலத்திலும் பல்வேறு இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும்          மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  •         1968 முதல் 1988 வரை இருபதாண்டுகள் ‘கணையாழி’ இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
  •         இலக்கியச் சிந்தனை விருது, என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது              உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 பதினெட்டாவது அட்சக்கோடு

கரைந்த நிழல்கள்

ஒற்றன்

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

1945இல் இப்படியெல்லாம் இருந்தது

அப்பாவின் சிநேகிதர் (சாகித்ய அகாடமி விருது)

 

19 February, 2024


இந்திரா பார்த்தசாரதி (1930)

மனைவி   : இந்திரா

இயற்பெயர் : பார்த்தசாரதி

 

  •         சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய வடிவங்களில் செயல்பட்டவர்.
  •         திருச்சி நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பிறகு, டெல்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியர். ஓய்வுக்குப் பிறகு பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
  •         சங்கீத் நாடக அகாடமி விருது, பாரதிய பாஷா பரிஷத், பத்மஸ்ரீ விருது, ‘தி இந்து’வின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்

சுதந்திர பூமி

தந்திர பூமி

குருதிப்புனல் (சாகித்ய அகாடமி விருது)

ஔரங்கசீப்

ராமாநுஜர்

19 February, 2024


கோவி.மணிசேகரன் (1927)

 (Kovi. Manisekaran, மே 21, 1927-நவம்பர் 18, 2021) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். 1992 இல் இவர் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

19 February, 2024


ராஜம் கிருஷ்ணன் (1925 – 2014)

 பிறப்பு      : 1925 (முசிறி, திருச்சி)

மறைவு     : 20.10.2014

பெற்றோர்  : யஞ்ஞ நாராயணன், மீனாட்சி

கணவர்    : முத்துகிருஷ்ணன்

மக்கள்      : —

 

  •         தன்னுடைய படைப்புகளுக்கான உள்ளடக்கத்தைக் கள ஆய்வு செய்து இறுதிசெய்யக்கூடிய ஆளுமை.
  •         இடதுசாரி இயக்கங்கள், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவற்றில் பங்களித்தவர்.
  •         சிறுகதை, நாவல், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, தன்வரலாறு ஆகிய வடிவங்களில் செயல்பட்டவர்.
  •         நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது, இலக்கிய சிந்தனை விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 கரிப்பு மணிகள்

சேற்றில் மனிதர்கள்

வேருக்கு நீர் (சாகித்ய அகாடமி விருது)

காலம்தோறும் பெண்

காலம்

19 February, 2024


தொ.மு.சிதம்பர ரகுநாதன் (1923 – 2001)

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

இடம்: திருநெல்வேலி

பெற்றோர்: தொண்டைமான் முத்தையா, முத்தம்மாள்

பொதுவுடைமைவாதியான தொ.மு.சி. ரகுநாதன், டி.கே.சி.யின் வட்டத்தொட்டி இலக்கிய குழாமைச் சேர்ந்தவர். 'தொ.மு.சி’என்று அறியப்பட்டார். சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், ஆய்வாளர், விமர்சகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.

இதழ்கள்: தினமணி, முல்லை, சக்தி, சாந்தி, சோவியத் நாடு.

படைப்பு:

பஞ்சும் பசியும்

கன்னிகா

புயல்

கங்கையும் காவிரியும்

பாரதி காலமும் கருத்தும்

பாரதியும் ஷெல்லியும்

புதுமைப்பித்தன் வரலாறு

விருது: சாகித்திய அகாதெமி.

19 February, 2024


அகிலன் (1922 - 1988)

 எழுத்தாளர்

இடம்: புதுக்கோட்டை மாவட்டம், பெருங்காளூர்

இயற்பெயர்: பி.வி.அகிலாண்டம்

நாவல், சிறுகதை, கட்டுரை, பயணக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், சிறார் இலக்கியம் எனப் பல்வேறு வகைகளையும் எழுதியுள்ளார். தமிழில் முதன்முதலில் ஞானபீட விருது பெற்றவர்.

படைப்பு:

மங்கிய நிலவு

பாவை விளக்கு

நெஞ்சின் அலைகள்

பெண்

எங்கே போகிறோம்?

சித்திரப்பாவை

கயல்விழி

வேங்கையின் மைந்தன்

விருது: சாகித்ய அகாடெமி, ஞானபீடம்

 

19 February, 2024


லட்சுமி (1921 - 1987)

 தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.

19 February, 2024


எம்.வி.வெங்கட்ராம் (1920 - 2000)

பெற்றோர்  : ’ரெங்கா’ வீரய்யர், சீதையம்மாள்

மனைவி   : ருக்மணி அம்மாள்

மக்கள்      : நான்கு மகன், மூன்று மகள்

 

  •         சிறுகதை, நாவல், வாழ்க்கை வரலாறு, மொழியாக்கம், கட்டுரை, நினைவுப் பதிவு, இதழியல், சொற்பொழிவு ஆகிய தளங்களில் செயல்பட்டவர்.
  •         சௌராஷ்டிரச் சமூகச் சங்கத்தில் தலைவராகப் பொறுப்புவகித்தவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடவும் செய்திருக்கிறார்.
  •         தமிழக அரசு விருது, லில்லி தேவசிகாமணி விருது, புதுமைப்பித்தன் சாதனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

 

முக்கிய நூல்கள்:

 எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள்

நித்ய கன்னி

வேள்வித் தீ

என் இலக்கிய நண்பர்கள்
காதுகள் (சாகித்ய அகாடமி விருது)

19 February, 2024


சி.சு.செல்லப்பா (1912 - 1998)

  பிறப்பு சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா

செப்டம்பர் 29, 1912

சின்னமனூர், தமிழ்நாடு, இந்தியா

இறப்பு திசம்பர் 18, 1998 (அகவை 86)

சென்னை

தொழில் இதழாளர் எழுத்தாளர் கவிஞர் நாடக ஆசிரியர் திறனாய்வாளர்

நாடு இந்தியா

இனம் தமிழர்

கல்வி இளங்கலை

கல்வி நிலையம் மதுரைக் கல்லூரி

இலக்கிய வகை திறனாய்வு

கருப்பொருட்கள் தமிழ் இலக்கியம்

குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) : வாடிவாசல்

ஜீவனாம்சம்

சுதந்திர தாகம்

எழுத்து இதழ்

குறிப்பிடத்தக்க விருது(கள்) விளக்கு

சாகித்யா அகாதெமி

துணைவர்(கள்) மீனாட்சி

உறவினர்(கள்) பி. எஸ். இராமையா

19 February, 2024


Page 16 of 20, showing 9 record(s) out of 177 total