செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்

"தொன்தமிழ் வேர் தாங்கும் விழுதுகள் இவர்கள் "

“தமிழ்மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களைப் போற்றும்
வகையிலும், அத்தகைய அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாகக்
கொள்ளும் வகையிலும், “செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச்சங்க பெரியோர்கள்

மயிலை சிவமுத்து (1892-1968)

 • இதழியல், கல்வி, கட்டுரை, உரைநடை, மொழிப் போராட்டம், சமூக முன்னேற்றம், குழந்தை இலக்கியம், இசை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • ‘தமிழ்த் திருமணம்’ என்னும் கருத்தாக்கத்தை உருவாக்கிப் பரப்பியவர். மாணவர் மன்றத்தின் வழியே தொடக்கப்பள்ளி தொடங்கி இலவசக் கல்வி, பாடநூல்கள், முன்மாதிரித் தமிழ்த்தேர்வுகள், கலைப்போட்டிகள் எனத் தமிழ்ப்பணி ஆற்றியவர்.
 • ‘தமிழ்நெறிக் காவலர்’ எனப் போற்றப்படுபவர்.

23 February, 2024


த.வே.உமாமகேஸ்வரனார் (1883 - 1941)

 • பதிப்பு, தமிழ்க்கல்வி, சமூகச் செயல்பாடு, கூட்டுறவுத் துறை, சட்டம், அரசியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • தமிழியக்கமாகச் செயல்பட்ட கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர். ‘ஸ்ரீமான்’, ‘ஸ்ரீமதி’ சொற்களுக்கு மாற்றாக ‘திருமகன்’, ‘திருவாட்டி’ என்பதான தனித்தமிழ்ப் பயன்பாட்டை உருவாக்கியவர்.
 • திருவையாறு கல்லூரியில் தமிழைக் கற்பிக்கவும்,
  ‘அரசர் கல்லூரி’ என அதற்குப் பெயர் சூட்டவும் பாடுபட்டவர்களில் ஒருவர். 'தமிழவேள்' உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர்.

23 February, 2024


வள்ளல் பாண்டித்துரை (1867 – 1911)

 • அச்சு, பதிப்பு, பைந்தமிழ் வளர்ச்சி, எழுத்து, மேடைத்தமிழ், தமிழிசை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கலாசாலை என்ற தமிழ்க்கல்லூரி, பாண்டியன் நூலகம், தமிழாய்வு மையம் ஆகியவற்றைத் தொடங்கியவர்.
 • சுதேசி நாவாய்ச் சங்கப் பெரும் கொடையாளர்.
  ‘தமிழ் வளர்த்த வள்ளல்’, ‘செந்தமிழ்ச் செம்மல்’ எனப்  புகழப்பட்டவர்.

23 February, 2024


பாஸ்கரசேதுபதி (1868-1903)

 • தமிழிசை, செய்யுள், நீர்மேலாண்மை, திருக்கோயில் திருப்பணி, மேடைத்தமிழ், ஓவியம் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர். சிக்காகோ நகரில் நடைபெற்ற பல்சமயப் பேரவைக்குச் சுவாமி விவேகானந்தரைத் தனது சொந்தச் செலவில் பங்கு பெற வைத்த பெருமைக்குரியவர்.
 • சமய நல்லிணக்கத்துடன் உயிர்க்கொலை தவிர்த்து, தமிழறிஞர்கள், கலைஞர்களை ஊக்குவித்த அறக்கொடையாளர்.

24 February, 2024


’இலக்கியவீதி’ இனியவன் (1942 – 2023)

 • திறனாய்வு, புத்தக வெளியீடு, கருத்தரங்கம், சிறுகதை, நாவல்,
  பயண நூல், பறவை ஆய்வு ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • ‘இலக்கியவீதி’ என்னும் அமைப்பை நிறுவிப் பல புதிய எழுத்தாளர்களை, கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். சென்னைக் கம்பன் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தவர்.
 • ‘கலைமாமணி’, ‘இலக்கியச் செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

24 February, 2024


வ​ரலாற்றுத் தமிழ் ஆய்வாளர்கள

வெ.சாமிநாதனார் (1895-1978)

 • இதழியல், பதிப்பு, சமூகம், கட்டுரை, நாடகம், சிறுகதை,
  கடித இலக்கியம், மொழிபெயர்ப்பு, பயண நூல், வாழ்க்கை வரலாறு, பொதுஅறிவு, அரசறிவியல் ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • தமிழில் அறிவியக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவர். உலக நாடுகள், தலைவர்கள், உலக இலக்கியங்கள் பற்றி பொது வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர்.
 • தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.

23 February, 2024


தி.வை.சதாசிவனார் (1892-1960)

 • கல்வி, வரலாற்றாய்வு, கல்வெட்டு, கட்டுரை, உரைநடை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • சோழர் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்து
  மூன்று தொகுதிகளாக வெளியிட்டவர். சான்றுகளின் அடிப்படையில் வரலாற்று நூல்களை எழுதும் முறையைப் புகுத்தியவர்.
 • வாழ்நாள் முழுவதும் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்தவர்.

23 February, 2024


வி கனகசபை (1855 - 1906)

 • இதழியல், பதிப்பு, உரைநடை, தமிழர் வரலாறு, ஆய்வு, மொழிபெயர்ப்பு, சுவடிகள் சேகரிப்பு, கல்வெட்டு, சட்டம், அஞ்சல்துறை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • தமிழ் மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து காலவரிசைப் படுத்தியவர்.
 • தமிழ்நாட்டின் பண்டைய வரலாறு, தொன்மை, பண்பாட்டுப் பெருமைகளை ஆங்கில மொழி மூலம் உலகுக்கு தெரிவித்தவர். பௌத்த இலக்கியங்களை ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதிய சிறப்பிற்குரியவர்.

24 February, 2024


தனித்தமிழ் அறிஞர்களஂ

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1933 – 1995) 

 • இதழியல், பதிப்பு, கவிதை, கட்டுரை, நாடகக்கலை, மேடைத்தமிழ், மொழிப் போராட்டம், பொதுவுடைமை, அஞ்சல் துறை ஆகிய தளங்களில் இயங்கியவர்.
 • தனித்தமிழ் இயக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவர்.
  ‘உலகத் தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர். இளம் மாணவர்களுக்காகத் ‘தமிழ்ச்சிட்டு’ இதழை நடத்தியவர்.
 • ‘தமிழ்த்தேசியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவர்.

25 February, 2024


Page 2 of 20, showing 9 record(s) out of 177 total