கி.வா.ஜகந்நாதன் (1906-1988)

கி.வா.ஜகந்நாதன் (1906-1988)
அறிமுகம்
கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ.வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[2] 1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
1933-இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949-இல் திருமுருகாற்றுப்படை அரசு, 1951-இல் வாகீச கலாநிதி, 1982-இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
எழுதிய நூல்கள்
அதிகமான் நெடுமான் அஞ்சி
அதிசயப் பெண்
அப்பர் தேவார அமுது
அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி விளக்கம்
அமுத இலக்கியக் கதைகள்
அழியா அழகு
அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
அறுந்த தந்தி
அன்பின் உருவம்
தமிழ் பழமொழிகளையும், நாடோடிப் பாடல்களையும் சேகரித்துக் கொடுத்து ஒரு பல்கலைக்கழகம் செய்யும் பணியை தனியொருவராகச் செய்து தமிழ் தொண்டு புரிந்தவர்.