இன்று மாலை 5.45 க்கு "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்"- நிகழ்வு 19

அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வில், இன்றைய நிகழ்வுக்கான அழைப்பிதழ்..!

நீதி மறுக்கப்பட்ட, அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் மனிதர்களின் மூன்று கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழின் மூன்று முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள் இவை.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு,  இன்றைய மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மகிழ்ச்சி..!

அத்துடன் இந்த வார 'ஞாயிறு மேடையில்' தோழர் இரா.சிந்தன் நம்மோடு இணையவிருக்கிறார்.

கதைகளுக்கான சுட்டிகள்:

எழுத்தாளர் இமையத்தின் 'நன்மாறன்  கோட்டை கதை'


எழுத்தாளர் அழகிய பெரியவனின் 'வனம்மாள்'


எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின்
' கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும்'

Weekly Children's Program: Puppet show on 25.06.2017 at 11.00 am to 12.30 pm


Title :  Puppet show "

Story telling By : Thomas Antony

Date  : 25.6.2017  (Sunday)

Time  : 11.00 am to 12.30 pm

Venue : Children Section, First Floor, Anna Centenary Library Chennai

Contact Person : Mr.Santhana Karthikeyan (Incharge, Kids Section, ACL)
Contact No: 044-22201011

Orientation Program for Competitive Exams Aspirants by Dr. V. Irai Anbu IAS on 25.06.2017

Anna Centenary Library conducts orientation program for competitive exams aspirants on every Sundays at 11am to 1pm. Dr. V. Irai Anbu, Principal Secretary /Commissioner, Department of Economics and Statistics, Govt of Tamil Nadu will be the resource person in this week "Orientation Program for Competitive Exams Aspirants"  on 25th June 2017. Entry Free! All are Welcome!இந்த வாரம் 24.06.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 24-06-2017 (சனிக்கிழமை) அன்று ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்   அவர்கள் “ஒரு பத்திரிகையாளரின் டைரி குறிப்புகள் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !