அண்ணா நூற்றாண்டு நூலகம் உலக புத்தக தினம் 2024

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பினை மேம்படுத்தும் நோக்கில் 23.04.2024 அன்று, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த உலக புத்தக தின கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 

  • குழந்தைகளுக்கான விரைவான வாசிப்பு (Quick reads for kids)
  • விருது பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனம் (Review about Award Winning writers)
  • ஓவியம் வரைதல் போட்டி (Drawing Competition)
  • எக்ஸ்பிரஸ்ஸோ ஆங்கிலம் (ஆங்கில திறனறிதல்) / Expresso English (English Literature Workshop)
  • சிறப்பு அழைப்பாளரின் பேச்சு (Invited Talk) 

குழந்தைகளுக்கான விரைவான வாசிப்பு (Quick reads for kids)

தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் இருந்து, தங்களுக்கு பிடித்த ஒரு புத்தகத்தினை தேர்வு செய்து, 7 நிமிடங்களில் வாசித்து முடிக்க வேண்டும். பின்னர் தமது புத்தக வாசிப்பினை குறித்து பேச வேண்டும். 

  • இடம் : குழந்தைகள் பிரிவு
  • நாள் : 16 ஏப்ரல் 2024 காலை 10.30 மணி முதல் 12.30மணி வரை
  • வயது : 5 முதல் 8 வரை & 9 முதல் 14 வரை
  • முன் பதிவு : 16.04.2024 அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை
  • பங்கேற்பாளர் எண்ணிக்கை : 20 போட்டியாளர்கள் (ஒவ்வொரு குழுவிற்கும்)

விருது பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனம் (Review about Award Winning writers)

மாநில / தேசிய / உலக விருது பெற்ற தமிழ் அல்லது ஆங்கிலப் புத்தகங்களின் ஆசிரியர்களைப் பற்றி வாசகர்களின் புரிதல் குறித்து அறிதல். இந்த போட்டியின் பங்கேற்பாளர்கள், விருது பெற்ற நூலின்  ஆசிரியரினைப் பற்றி 5 நிமிடம் பேச வேண்டும்.  தங்கள் பேச்சு குறித்த சுருக்கத்தினை (Abstract) இணைய வழி முன்பதிவின் போது பதிவிட வேண்டும். தாங்கள் வழங்கும் சுருக்கத்தின் அடிப்படையில், போட்டிக்கு ஒவ்வொரு குழுவிற்கும் (மூன்று பிரிவுகள்) (தமிழ் மற்றும் ஆங்கிலம்) 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்கள் நிகழ்வில் பங்கேற்கலாம்.

  • இடம் : 8ஆம் தளம்
  • நாள் : 23 ஏப்ரல் 2024 காலை 10.30 முதல்12.30 வரை
  • வயது : 13-19 ; 20-25 ; 26 வயது மற்றும் அதற்கு மேல்
  • பங்கேற்பாளர் எண்ணிக்கை : 60 போட்டியாளர்கள் (தமிழ் 30 ; ஆங்கிலம் 30)
  • முன் பதிவு : Google Form Link (15.04.2024 க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்)
  • https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd6kSkS2_4Uv3vj3DNqtovWJ5cuJuh0y2ynkk5nrdgXb2b8hw/viewform

ஓவியம் வரைதல் போட்டி (Drawing Competition)

2024 வருட உலக புத்தக தினத்தின் கருத்துரு “Read Your Way”. இந்த கருத்துருவை மையமாகக் கொண்டு குழந்தைகள் ஓவியப் போட்டியில் பங்கேற்கலாம். 

  • இடம் : குழந்தைகள் பிரிவு
  • நாள் : 23 ஏப்ரல் 2024 காலை 10.30 முதல் 01.00 வரை
  • வயது : 5 முதல் 8 வரை & 9 முதல் 14 வரை
  • முன் பதிவு : காலை 9 முதல் 10 வரை
  • பங்கேற்பாளர் எண்ணிக்கை : 25 போட்டியாளர்கள்

எக்ஸ்பிரஸ்ஸோ ஆங்கிலம் (ஆங்கில திறனறிதல்) / Expresso English

பள்ளி மாணக்கர்களின் ஆங்கிலத் திறனை அறியவும், மேம்படுத்தவும்  இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.  இணைய வழியில் முன் பதிவு செய்யும் பொழுது,  ஆங்கில மொழியறிவு குறித்த கேள்விகளுக்கு, பங்கேற்பாளர்கள் விடையளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், போட்டியின் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • இடம் : இரண்டாம் தளம் கருத்தரங்கு கூடம்
  • நாள் : 23 ஏப்ரல் 2024 காலை 10.30 முதல் 01.00 வரை
  • வயது : 10 முதல் 14 வரை
  • பங்கேற்பாளர் எண்ணிக்கை : 25 போட்டியாளர்கள்
  • முன் பதிவு : Google Form Link (20.04.2024 க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்)
  • https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdgBMV9m8L1kXgz25qj_sL6LMjjGWtYj3tYekiucAKs29NIng/viewform

சிறப்பு அழைப்பாளரின் பேச்சு (Invited Talk)

உலக புத்தக தின கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வாக திருவாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் சிறப்புரை 23.04.2024 அன்று மாலை 05.30 மணிக்கு நடைபெறும். உலக புத்தக தின கொண்டாட்ட போட்டிகளில் பங்கேற்றவர்களில் வெற்றி பெற்றவர்கள் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்,