சென்னை இலக்கியத் திருவிழா 2023 - மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் தொடக்க விழா

சென்னை இலக்கியத் திருவிழா 2023 சென்னை, அண்ணா நகர், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் இன்று (04.01.2023 புதன்கிழமை) காலை 9 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன், சென்னை இலக்கியத் திருவிழா 2023-ன் ஒருபகுதியான கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் தொடக்க விழா தொடங்கியது. பொதுநூலகத்துறை இயக்குநர் திரு. இளம்பகவத், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரை நல்கினார். கல்லூரித் தாளாளர் திரு. விக்ரம் அகர்வால், பேராசிரியர் முனைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை இலக்கியக் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. கோ. ஒளிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நலன் மற்றம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டிகளை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமை உரையாற்றினார். சென்னை இலக்கியக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் மீனா குமாரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.