Notificataions

 

பொது நூலக இயக்க்கத்தின் மூலம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உருவாக்கப்படவுள்ள போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கான கற்றல் மேலாண்மை முறைமை (E-Learning Management System) - வினாக்கள் தயாரிப்பதற்கான மற்றும் வினாக்கள் மதிப்பீடு செய்வதற்கான தன்னார்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய - Click here


வினாக்கள் தயாரிப்பதற்கான தன்னார்வலர் விண்ணப்பம்  - Click Here


வினாக்கள் மதிப்பீடு செய்வதற்கான தன்னார்வலர் விண்ணப்பம் - Click Here

FAQ on e-LMS

E Learning management system

பொது நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் மின்னணு கற்றல் முறைமை ( e-Learning management system) ஏற்படுத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் திட்டமிட்டுள்ளது. அது குறித்த சில வினாக்களும் விடைகளும். 


e-learning management system என்றால் என்ன?

மின்னணு கற்றல் முறைமை என்பது கல்வி கற்றல்- கற்பித்தலில்  தற்பொழுது வளர்ந்து வரும் மிக முக்கியமான தொழில்நுட்பம் ஆகும். அதாவது ஒரு மாணவர் தாங்கள் விரும்பும் பாடத்தை விரும்பும் வேகத்தில் படிப்பதும் அது தொடர்பான மாதிரி தேர்வுகளை எழுதி பழகுவதும், அது தொடர்பாக மற்றவர்களுடன் உரையாடுவதும், அந்த தேர்வுகளில் பிற மாணவர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதும், தவறுகள் எதனால் ஏற்படுகின்றன அந்தத் தவறுகளை தீர்ப்பதற்காக மேலும் படிக்க வேண்டிய நூல்கள் என்ன என்று அறிந்து கொள்வதும் மின்னணு கற்றல் முறைமையில் முக்கிய அம்சங்கள் ஆகும். 


கற்றல் முறைமைக்கும் சாதாரணமாக நூல்கள் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

சாதாரண நூல்கள் படிக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பாக தாங்களே தேடிப் படிக்க வேண்டி இருக்கும். குறிப்பிட்ட தகவல் எந்த நூலில் உள்ளது என்று தெரியாமல் தேடுவதே பெரும் வேலையாக இருக்கும். யார் ஒருவர் தகவல்  எந்த நூலில் எந்த இடத்தில் உள்ளது என்று சரியாக அறிகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார். அதற்கு மரபார்ந்தந்த புத்தகங்கள் விரைவாக உதவி செய்யாது. கணினி உதவியுடன் தொகுக்கப்பட்ட பாடங்கள் கற்றலை எளிமையாக்கும்.


இந்த வசதி யாருக்கானது?

கற்றல் முறைமை வசதி தற்பொழுது போட்டி தேர்வு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள், பேங்கிங், ஆர்ஆர்பி, எஸ்.எஸ்.சி, யு.எஸ்.ஆர்.பி, யு.பி.எஸ்.சி போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இந்த கற்றல் முறைமையில் வழிகாட்டுதல் கிடைக்கும். 


இந்த கற்றல் முறைமையில் யார் இணைந்து கொள்ளலாம்?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நூலகங்களில் பயிலும் போட்டி தேர்வு ஆர்வலர்கள் இந்த கற்றல் முறைமையில் இணைந்து பயன்பெறலாம். இதற்காக அவர்கள் போட்டி தேர்வு பிரிவில் உறுப்பினராக சேர வேண்டும்.


இந்தக் கற்றல் முறைமையில் உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?

அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் அதன் பாடத்திட்டம் வாரியாக தொகுக்கப்பட்ட வினாக்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கும்.


இந்த வினாக்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன?

போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட அனைத்து முந்தைய ஆண்டு வினாக்கள் இதில் இடம் பெற்று இருக்கும். இது தவிர புதிதாக ஒரு லட்சம் வினாக்கள் தயாரித்து வழங்கப்படும்.


ஒரு லட்சம் வினாக்களை   தயாரிக்கப் போவது யார்?

 போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் ஆர்வலர்களே இந்த வினாக்களைத் தயாரிக்கப் போகிறார்கள்! 


போட்டித் தேர்வுக்குத் தயாராகி வரும் ஆர்வலர்கள் வினாக்கள் தயாரித்தால் அவர்களுக்கு என்ன பலன்?

ஒரு வினாவை பயிற்சி செய்து பார்ப்பதைவிட அந்த வினாவை உருவாக்குவது ஐந்து மடங்கு கடினமானது. இவ்வாறு வினா உருவாக்கும் திறன் கைவரப்பெற்றால் அதனை உடைத்துப் பார்க்கும் திறனும் எளிதாக கைவரப்பெறும். வினாக்கள் தயாரிக்க தெரிந்தவருக்கு விடைகளை கண்டறிவது மிகச் சுலபம். வினாக்கள் தயாரிப்பது ஒரு வகையான பயிற்சிதான். இருப்பினும் நல்ல வினாக்கள் தயாரிக்கும் போட்டி தேர்வு தன்னார்வலர்களுக்கு  மதிப்பூதியமும் வழங்கப்படும்.


எவ்வளவு மதிப்பூதியம் வழங்கப்படும்?

மாதிரி தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வினாவை தயாரிப்பதற்கு ரூபாய் 10 மதிப்பூதியமாக கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்படாத வினாக்களுக்கு மதிப்பூதியம் இல்லை. 


மாணவர்களால் உருவாக்கப்பட்ட வினாக்களை சரி பார்த்து தேர்ந்தெடுப்பது யார்?

போட்டித் தேர்வுகளில் ஏற்கனவே எழுதி வெற்றி பெற்றவர்கள், இறுதிவரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த அனுபவம் மிக்க போட்டி தேர்வு ஆர்வலர்கள் வினாக்களை சரி பார்த்து மாதிரி தேர்வு வினாக்களை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களுக்கும் மதிப்பூதியம் வழங்கப்படும்.


இதில் எந்த ஊரில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்?

தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் உள்ள பொது நூலகங்களின் பயிலும் போட்டி தேர்வு ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.


இதில் பங்கேற்க இங்கு விண்ணப்பிக்க வேண்டும்? 

கீழ்க்கண்ட இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். http://www.annacentenarylibrary.org/p/e-lms.html


இதற்கான விவரங்கள் எங்கு நிர்வகிக்கப்படும்?

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு வழிகாட்டும் மையத்தில் (Career guidance cell)  இதற்கான தொகுக்கும் பணிகள் நடைபெறும்.


இது எப்படி எப்பொழுது செயல்பாட்டுக்கு வரப்போகிறது?

விரைவில் இந்த கற்றல் முறைமை ஒரு தனியான இணையதளம் மூலம் செயலுக்கு வரப்போகிறது.