Weekly Children's Program : Kadal Bootham - 03.06.2018 - 11.00 am

Posted by Children Section, Anna Centenary Library on 11:04 AM
Weekly Children's Program: 'Kadal Bootham' -  முனைவர் வேலு சரவணன் (நாடகக் கலைஞர்) அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வருகின்ற ஞாயிறன்று (03.06.2018) "கடல் பூதம்" என்கிற குழந்தைகளுக்கான நாடக தலைப்பில் நடித்து குழந்தைகளை குதூகலப்படுத்த உள்ளார். 

குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் வந்து  "கடல் பூதம்" என்கிற குழந்தைகளுக்கான நாடக தலைப்பில் நடைபெற உள்ள நாடக நிகழ்ச்சியை கண்டு மகிழ அழைக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகள் பிரிவு. அனுமதி இலவசம்.




முனைவர் வேலு சரவணன் அவர்களைப் பற்றி: குழந்தைகளுக்கான நாடகங்கள், கதை சொல்லல், குழந்தைகளுக்கான இலக்கிய தொகுப்புகள் என பல்வேறு தளங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். இந்த ஆண்டுக்கான 'பால் புரஸ்கார் விருதுக்கு' முனைவர் வேலு சரவணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது புதுச்சேரி பல்கலைக்கழத்தில் நாடகத்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிக் கொண்டு வருகிறார்.

16.04.2011 ஆம் நாளன்று முனைவர். வேலுசரவணன் மற்றும் குழுவினர் நிகழ்த்திய குழந்தைகளுக்கான நாடகம் "கடல் பூதம்" சிறப்பாக நடைபெற்றது. அதன் செய்தி தொகுப்பு : Click Here (இங்கே கிளிக் செய்யவும்)
Categories: