அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகள் பிரிவு - " கோடைக் கொண்டாட்டம் - 2018 " இனிதே நிறைவுற்றது.

Posted by Unknown on 6:34 PM

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க 'கோடைக் கொண்டாட்டம்' என்ற தலைப்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.எ.செங்கோட்டையன் அவர்களால் 02.05.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டு இன்றுடன் (31.05.2018) இனிதே நிறைவுற்றது.

இக் " கோடைக் கொண்டாட்டம் - 2018 " எனும் நிகழ்வில் 'சம்ஸ்கிரியா' மற்றும் 'அயான்' நிறுவனம் மூலம்  சிறுவர்களுக்கு கீழ்கண்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.

  • அறிவியல் செயல்திறன்
  • ஒலி ஆய்வுகள்
  • ஒளி பற்றிய சோதனைகள்
  • இலக்கு நிர்ணயம்
  • தகவல் பரிமாற்றத் திறன்
  • ஆளுமைத் திறன் மேம்பாடு
  • தொடுதல் குறித்த விழிப்புணர்வு 
  • புத்தகங்கள் வாசிப்பின் பயன்கள்
  • ஆரோக்கிய உணவு முறைகள் மற்றும் 
  • தமிழில் கற்பனை கதைகள் எழுதுதல் வரைதலுடன் 
மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இக்கொடைக் கொண்டாட்ட நிகழ்வு அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு சம்பந்தமாக நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வெளிவந்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம்  நிகழ்வின் புகைப்படங்கள்: Click Here (இங்கே கிளிக் செய்யவும்).

விகடன் இணையதளத்தில் - அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம்  நிகழ்வு  சம்பந்தமாக 08.05.2018 அன்று  வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)

பாலிமர் செய்தி துளி அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம்  நிகழ்வு  சம்பந்தமாக  14.05.2018 வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)

வின் தொலைக்காட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம்  நிகழ்வு  சம்பந்தமாக 28.05.2018 அன்று  வெளியிடப்பட்டது: Click Here (இங்கே கிளிக் செய்யவும்)

இ-நாடு நாளிதழில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு கோடைக் கொண்டாட்டம்  நிகழ்வு  சம்பந்தமாக  21.05.2018 அன்று வெளியிடப்பட்டது

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு ஞாயிறன்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதிலும் குழந்தைகள் பங்கு பெறலாம். அனுமதி இலவசம்.

Categories: