சிறுவர்களுக்கான வினாடி வினா (Quiz Program and Book Talk) போட்டி, 22.04.2017

Posted by Anna Centenary Library on 3:37 PM
வாசகர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் பிரிவில் ‘கோடை கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் இன்று ( 22.04.2017 ) சிறுவர்களுக்கான வினாடி வினா  (Quiz Program and Book Talk) போட்டி  Scholastic Publisher நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் திரு.பிப்லாப் பக்தா (Biplop Bhakta) அவர்களால் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மொத்தம் 65 குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். சிறுவர்கள் ஐந்து குழுக்களாக போட்டியில் கலந்துகொண்டனர். பேமஸ் பைவ் என்ற குழு முதல் பரிசை தட்டி சென்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
Categories: ,